2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

சென்னை: ‛‛தமிழ் திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளிப்பதன் மூலம், தமிழ் மொழியும், கலாச்சாரமும் வளர்ந்துள்ளதா என, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார். தமிழ் திரைப்படங்களுக்கு ‛ யு யுஏ ஏ என மூன்று வகையான தணிக்கை சான்றிதழ்கள் அளிக்கப்படுகின்றன. இதில், ‛யு சான்றிதழ் கிடைக்கும் படங்களுக்கு தமிழக அரசின் வரிவிலக்கு பெற தகுதி உள்ளது.
‛சவாரி என்ற படத்திற்கு, ‛யு சான்றிதழ் அளித்தும் அதை நடைமுறைப்படுத்தவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நீதிபதி கிருபாகரன் எழுப்பிய கேள்விகள்:
*திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளிப்பதன் மூலம், தமிழ்மொழியும், கலாச்சாரமும் வளர்ந்துள்ளனவா?
* கடந்த 2006 ஆண்டு முதல் படங்களுக்கு வரி விலக்கு அளித்ததன் மூலம் எவ்வளவு தொகை செலவானது?
* வரி விலக்கு அளிக்கப்பட்ட படங்களுக்கான டிக்கெட் விலை ஏன் குறைக்கப்படவில்லை?
* வன்முறை காட்சிகள் நிறைந்த ‛டிவி தொடர்களுக்கு ஏன், ‛ஏ சான்றிதழ் அளிக்க கூடாது?
இவ்வாறு நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.