தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் |

புகார்களை ஆதாரத்துடன் தான் கூறுகிறோம்; எதையும், சட்டப்படி சந்திக்கத் தயார், என, நடிகர் கார்த்தி கூறினார்.
சென்னையில், தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கார்த்தி அளித்த பேட்டி: நட்சத்திர கிரிக்கெட்டில் ஊழல் நடந்திருப்பதாக, பொய் புகார் கூறுகின்றனர். நாங்கள் நியாயமான முறையில், அனைத்தையும் சட்டத்திற்கு உட்பட்டு செய்துள்ளோம். நடிகை ராதிகா சொல்வது போல், எதையாவது பேச வேண்டும் என்பதற்காக, புகார் கூறவில்லை. ஆடிட்டர் மற்றும் வழக்கறிஞர்கள் தந்துள்ள ஆதாரத்துடன் தான் பேசுகிறோம். சரத்குமார், ராதாரவி நிரந்தர நீக்கம் குறித்து, பொதுச் செயலர் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளார். பொருளாளரான நான், பதில் கூறுவது சரியாக இருக்காது; எதையும், நாங்கள் சட்டப்படி சந்திக்க தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.