சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

ஜீவா நடித்த திருநாள் மற்றும் இருடியம் உள்பட பல படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்தவர் ராகவா ஆனந்த். தற்போது புரூஸ்லீ, மாற்றுத்திறனாளி, அல்வா உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். நான் தீவிரமான எம்.ஆர்.ராதா ரசிகன் என்று சொல்லும் அவர், அவரை பின்பற்றி ஒரு நடிகராக வேண்டும் என்பதே எனது ஆசை என்கிறார்.
அவர் மேலும் கூறுகையில், திருநாள் படத்தில் ஜீவாவுடன் வில்லத்தனமான ரோலில் நடித்தேன். இருடியம் படத்தில் காமெடியனாக நடித்தேன். தற்போது ஜி.வி.பிரகாசின் புரூஸ்லி மற்றும் மாற்றுத்திறனாளி, அல்வா படங்களில் நெகடீவ் கலந்த வேடங்களில் நடிக்கிறேன். என்னைப்பொறுத்தவரை இப்போதைக்கு இந்த மாதிரியான வேடங்களில்தான் நடிப்பேன் என்று கூறவில்லை. டைரக்டர்கள் என் தோற்றத்திற்கு எந்த மாதிரியான வேடம் கொடுத்தாலும் மறுக்காமல் நடிப்பேன்.
மேலும் நான் சினிமாவில் 20 வருடமாக இருக்கிறேன். நீண்டகால முயற்சி இப்போதுதான் கைகொடுத்துள்ளது. முதலில் நார்மல் கெட்டப்பில் சான்ஸ் கேட்டேன். யாரும் கண்டு கொள்ளவில்லை. பின்னர் தலையில் முடிவளர்த்து வித்தியாசமான கெட்டப்புக்கு மாறினேன். அதன்பிறகுதான் டைரக்டர்கள் என் பக்கம் திரும்பினார்கள். எனக்கு மரியாதை கிடைத்தது. அதனால் தலைமுடியை நன்றாக பராமரித்து வருகிறேன் என்று கூறும் ராகவா ஆனந்த், எனக்கு பிடித்த மான நடிகர் எம்.ஆர்.ராதா. இப்படித்தான் என்றில்லாமல் எல்லா ஏரியாக்களிலும் புகுந்து விளையாடக்கூடிய அற்புதமான நடிகர். அவரை மாதிரி நடிக்க முடியாது என்றாலும், அவரை பின்பற்றி சினிமாவில் நானும் ஒரு நடிகனாக இடம்பிடிக்க ஆசைப்படுகிறேன் என்கிறார்.