சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

கேரள நாட்டிளம் பெண்களுடனே, டூரிங் டாக்கீஸ், பட்டதாரி உள்பட பல படங்களில் நாயகனாக நடித்தவர் அபி சரவணன். அதையடுத்து சாயம், எதிர் கொள், விசிறி, பவுடர், மீனாட்சிபுரம் என ஐந்து படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படங்களில் படத்திற்கு படம் மாறுபட்ட கதைகளில் நடித்து வருவதாக சொல்லும் அவர், பட்டதாரி படத்திற்கு பிறகு என்னை முழுஹீரோவாக தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்கிறார்.
அவர் மேலும் கூறும்போது,
மதுரையில் டூ-வீலர் மெக்கானிக் பையன் நான். என் அண்ணன் விஜி அப்துல்கலாமோட உதவியாளர். நான் டிப்ளமோவில் சேர்ந்து வேலைக்கு போனேன். நன்றாக வேலை பார்த்ததாக மதுரையில் விருது கொடுத்தனர். அப்போது அந்த முதலாளி, இந்த பையன் நல்லா வேலை செய்றான் மெக்கானிக்கா விடாதீங்க. மேனேஜ்மென்டில் விடுங்க என்றார். அதையடுத்து மேனேஜர் ஆகி விட்டேன். டிவிஎஸ் வரலாற்றிலேயே டிப்ளமோ படிச்சு மேனேஜர் ஆனவன் நான் மட்டுமே. அப்போது ஒரு சின்ன மனக்கசப்பில் ஒருவர் நீ என்னடா டிப்ளமோ, நான் பிஇ என்றார். அந்த மனக்கசப்பில் நான் எஞ்சினியரிங் முடிச்சு வேலைக்கு போய் விட்டேன். மெக்கானிக்கில் படிப்படியாக முன்னேறி பெங்க ளூருக்கு வேலைக்கு போய் விட்டேன். அப்போதெல்லாம் சினிமாவைப்பற்றிய கனவெல்லாம் எனக்கு கிடையாது.
அப்போதும் ஒரு மேனேஜர் என்னை ஓவராக பேசி விட்டார். அதன்பிறகு எம்பிஏ முடித்து விட்டு அதே கம்பெனியில் மேனேஜராக வேலைக்கு போய் விட்டேன். எந்த கம்பெனியில் என்னை அசிங்கப்படுத்தினார்களோ அங்கேயே மேனேஜர் ஆனேன். அப்போது ஒருவர் ஜாலியாக நீயெல்லாம் கலர் கலராக சட்டைய போட்டுட்டு சினிமாவுல போகதான்டா லாயக்கி. நீ குட்டிச்சுவரா போயிடுவே என்றார். அதை ஒரு சவாலாக எடுத்துட்டு சினிமாவுக்கு வந்தேன். தெருத்தெருவாக அலைஞ்சேன். சாப்பிட கூட மாட்டேன். டீக்கடைகளில்தான் போய் இருப்பேன். யாராவது சினிமாவைப்பற்றி பேசினால் கேட்பேன்.
அப்போது கபாலி டைரக்டர் ரஞ்சித் சார் இயக்கிய அட்டகத்தியில்தான் முதன்முதலாக நடித்தேன். அதன்பிறகு குட்டிப்புலி படத்தில் பாலசரவணன் நடித்த வேடத்தில் நான்தான் நடிக்கயிருந்தேன். அந்த நேரத்தில், இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் இயக்கிய கேரள நாட்டிளம் பெண்களுடனே படத்தில் ஹீரோ வாய்ப்பு கிடைத்ததால் குட்டிப்புலி படத்தில் இருந்து விலகி இந்த படத்துக்கு வந்தேன். முதலில் ஹீரோ சான்ஸ் தருவதாக சொன்ன அவரோ, பின்னர் ஹீரோ வாய்ப்பு இல்லை என்று சொல்லி உதவி இயக்குனர் வேலை செய்ய அழைத்தார். நானும் சரி என்று கிளாப் அடித்துக்கொண்டிருந்தேன். அப்போது ஹீரோ-ஹீரோயினி நடிக்க வேண்டிய காட்சிக்கு ஹீரோ வரவில்லையே? என்று அவரிடம் கேட்டபோது, முட்டாப்பயல நீதான்டா ஹீரோ என்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதுவரைக்கும் என்னிடம் அவர் சொல்லவேயில்லை. அதன்பிறகு டூரிங் டாக்கீஸ், பிளசா மைனசா படங்களில் நடித்த பிறகு நடுக்கம், ஆடுபுலி ஆட்டம் போன்ற மலையாள படங்களிலும் நடித்தேன்.
அதன்பிறகு பட்டதாரியில் நடித்தேன். இந்த படத்தைப்பார்த்த பிறகுதான் என்னை முழுஹீரோவாக அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். என்னை தவறாக பேசியவர்கள்கூட இப்போது புகழ்ந்து பேசுகின்றனர். சந்தோசமாக உள்ளது. இதையடுத்து ஒரே நேரத்தில் ஐந்து படங்களில் நடித்துக்கொண்டி ருக்கிறேன். தற்போது சாயம், எதிர்கொள், விசிறி படப்பிடிப்புகள் பிசியாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் விசிறி படத்தில் அஜித்தின் தீவிர ரசிகராக நடிக்கிறேன். நிஜத்திலும் நான் அஜித் ரசிகன்தான். அஜித் படம் வெளியாகும் முதல்நாளே தியேட்டருக்கு சென்று விடுவேன். அதோடு எனது நண்பர்களை யும் அழைத்து சென்று என்சாய் பண்ணி படம் பார்ப்பேன்.
அப்படி நான் ரசித்த அஜித்தின் ரசிகனாக நடிப்பது மிகப்பெரிய சந்தோசமாக உள்ளது. அதேபோல் விஜய் அண்ணனின் நடிப்பும் எனக்கு பிடிக்கும். அவர்கள் நடித்த படங்களை பார்த்துதான் நான் நடிப்பு கற்றுக்கொண்டேன் என்று சொல்லும் அபி சரவணன், நான் தற்போது நடித்து வரும் படங்கள் திரைக்கு வரும்போது தமிழ் ரசிகர்கள் என்னை முழுசாக ஏற்றுக்கொள்வார்கள். காலம் கண்டிப்பாக எனக்கு கைகொடுக்கும் என்று உறுதியாக நம்புகிறேன் என்கிறார்.