Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மூன்றாவது முறையாக ரஜினி டைட்டிலில் உதயநிதி

29 நவ, 2016 - 15:55 IST
எழுத்தின் அளவு:
Udhayanidhi-third-time-in-Rajini-Title

'மனிதன்' படத்தின் தோல்விக்குப் பிறகு சில மாதங்கள் அமைதியாக இருந்தார் உதயநிதி. அதன்பிறகு தொடர்ந்து கதைகள் கேட்டு வந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது ஒரு நேரத்தில் மூன்று படங்களில் நடிக்கிறார். கௌரவ் இயக்கத்தில் ஒரு படம், எழில் இயக்கத்தில் 'சரவணன் இருக்க பயமேன்', அறிமுக இயக்குனர் தளபதி பிரபு இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். இவற்றில் எழில் இயக்கும் 'சரவணன் இருக்க பயமேன்' படம் மட்டுமே உதயநிதியின் சொந்தப்படம். இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது.


இன்னொரு பக்கம், லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் கௌரவ் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. 'ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தளபதி பிரபு இயக்கும் படத்திற்கு 'பொதுவாக எம் மனசு தங்கம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.


உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு 'பொதுவாக எம் மனசு தங்கம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருக்கிறார்கள். ரஜினி நடித்த 'மனிதன்' பட தலைப்பை தனது படத்திற்கு தலைப்பாக்கிய உதயநிதி ஸ்டாலினுக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஆனாலும், இரண்டாவது முறையாக 'சரவணன் இருக்க பயமேன்' என்ற ரஜினி பட வசனத்தை தனது படத்திற்கு தலைப்பாக்கினார். இப்போது மூன்றாவது முறையாக 'பொதுவாக எம் மனசு தங்கம்' என்ற ரஜினி படத்தின் பாடல் வரியை தனது படத்திற்கு தலைப்பாக சூட்டியுள்ளார் உதயநிதி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in