தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் |

'அனேகன்' படத்திற்குப் பிறகு விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன் நடிக்கும் 'கவண்' படத்தை இயக்கி வருகிறார் கே.வி.ஆனந்த். இந்தப் படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. டி.ராஜேந்தர், விக்ராந்த் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கும் இப்படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் 18வது படமாக உருவாகி வரும் 'கவண்' படத்தின் கதை பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. வைரமுத்துவின் மகன் கபிலன் வைரமுத்து எழுதிய மெய் நிகரி நாவலின் கதையைத்தழுவித்தான் கவண் படம் உருவாகி வருகிறதாம்.
'மெய்நிகரி' தவிர 'பூமரேங் பூமி', 'உயிர்ச்சொல்'ஆகிய நாவல்களையும் எழுதியிருக்கும் கபிலன் ஐந்து கவிதைத் தொகுதிகளையும் வெளியிட்டிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் இதழியல் பட்டம் பெற்ற இவர், தமிழில் ஒரு தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியை வழங்கி வந்தார்.
தற்போது திரைத்துறையில் எழுத்தாளராகவும், பாடலாசிரியராகவும் இயங்கிக் கொண்டிருக்கிறார்.
கே.வி.ஆனந்த் இயக்கும் கவண் தவிர, அஜித்-சிவா கூட்டணியில் உருவாகிக்கொண்டிருக்கும் 'அஜித்57', மற்றும் 'இந்திரஜித்', 'சிங்கம்3', 'மதியால் வெல்', 'காஷ்மோரா' இயக்குநர் கோகுலின் அடுத்த படம் உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் கபிலன் வைரமுத்து பணியாற்றி வருகிறார்.