தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை படத்தில் அண்ணன்-தம்பியாக நடித்தவர்கள் விக்னேஷ்-ரமேஷ். சின்ன காக்கா முட்டை பெரிய காக்கா முட்டை என்ற கேரக்டர்களில் நடித்த இவர்கள் அந்த ஒரே படத்தில் பெரிய அளவில் பிரபலமாகி விட்டனர். அதையடுத்து, பெரிய காக்கா முட்டை விக்னேஷ், சமுத்திரகனி இயக்கிய அப்பா படத்தில் அவரது மகனாக நடித்தார். அதேப்போல் சின்ன காக்கா முட்டை ரமேஷ், டெய்லி பேப்பர் என்ற படத்தில் பேப்பர் போடும் சிறு வனாக லீடு ரோலில் தற்போது நடித்து வருகிறார்.
அதையடுத்து, கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா கலெக்டராக நடித்துள்ள அறம் படத்தில் விக்னேஷ்-ரமேஷ் இருவருமே முக்கிய கேரக்டர்களில் நடித்து ள்ளனர். அதேபோல், தற்போது அவர்கள் மலையாளத்திலும் ஒரு படத்தில் மீண்டும் அண்ணன்-தம்பியாக நடித்து வருகின்றனர். காக்கா முட்டை பாணியில் இன்னொரு புதுமையான கதையில் உருவாகி வரும் அந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடந்து வருகிறது. கடந்த மாதம் 15-ந்தேதியில் தொடங்கிய படப்பிடிப்பு அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடக்கிறதாம். அதனால் தற்போது விக்னேஷ்-ரமேஷ் இருவருமே கேரளாவில் முகாமிட்டுள்ளனர்.