எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
பிரபல கர்நாடக சங்கீத மேதை பாலமுரளி கிருஷ்ணா நேற்று தான் காலமானார் என்ற செய்தி மறைவதற்குள் திரையுலகில் அடுத்து ஒரு சோக செய்தி வந்துள்ளது. சத்ரியன், பிரம்மா உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குநர் சுபாஷ்(57), உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று(நவ.23) காலமானார்.
இயக்குநர் மணிரத்னத்திடம் ‛நாயகன்' உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய சுபாஷ், 1988-ம் ஆண்டு பிரபுவை வைத்து ‛கலியுகம்' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து அவர் விஜயகாந்த்தை வைத்து இயக்கிய ‛சத்ரியன்' படம் சூப்பர் - டூப்பர் ஹிட்டாக அமைய அவரை பிரபலமாக்கியது. அதன்பின் பவித்ரா, சுயம்வரம், பிரம்மா, பங்காளி, உத்தம புருஷன், நேசம், நினைவிருக்கும் வரை, ஏழையின் சிரிப்பில், சபாஷ் உள்ளிட்ட படங்களை இயக்கினார்.
பின்னர் பாலிவுட்டிற்கு சென்ற சுபாஷ், அங்கு பிரபல கதாசிரியராக திகழ்ந்தார். ஷாரூக்கான் நடித்த ‛சென்னை எக்ஸ்பிரஸ்', ‛தில்வாலே', அக்ஷய் குமார் நடித்த ‛எண்டர்டெயின்மென்ட்', ‛ஹவுஸ்ஃபுல் 3', அஜய் தேவ்கன் நடித்த ‛சண்டே' போன்ற படங்களுக்கு கதாசிரியராக இருந்துள்ளார்.
சிறுநீரக கோளாறு மற்றும் இதய கோளாறு காரணமாக சென்னை எஸ்ஆர்எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுபாஷ், சிகிச்சை பலன் இன்றி இன்று(நவ., 23ம் தேதி) மரணமடைந்தார். இவர், பராசக்தி, ரத்த கண்ணீர் போன்ற வெற்றி படங்களை இயக்கிய கிருஷ்ணன் - பஞ்சு இருவரில், கிருஷ்ணனின் மகன் ஆவார். இயக்குநர் சுபாஷ்க்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சுபாஷின் உடல், சென்னை, தி.நகர், ஹலிபுல்லா சாலையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள மின் மாயனத்தில் உடல் தகனம் செய்யப்படுகிறது.