பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் எங்க வீட்டுப்பிள்ளை படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் நிலையில், அந்த படத்தில் இரண்டாவது நாயகியாக அபர்ணா வினோத் என்ற மலையாள நடிகை நடித்து வருகிறார். இப்படத்தில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ரோலில் நடிக்கிறார் அபர்ணா. இந்நிலையில், அப்படத்தில் மூன்றாவதாக இன்னொரு நடிகையும் இப்போது கமிட்டாகியிருக்கிறார். அவர் வேறு யாருமல்ல, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் நாயகனாக நடித்த டூரிங் டாக்கீஸ் படத்தில் நாயகியாக நடித்த பாப்ரி கோஸ்தான்.
மேலும், பெங்காலி மொழியில் பல படங்களில் நடித்துள்ள இந்த பாப்ரி கோஸ், டூரிங் டாக்கீஸ் படத்தை அடுத்து ஓய் என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து மகா நட்சத்திரம், துப்பறியும் சங்கர் போன்ற படங்களில் நடித்து வருபவர், தற்போது விஜய்யின் எங்க வீட்டு பிள்ளையிலும் கமிட்டாகியிருக்கிறார். இந்த படத்தில் பாப்ரி கோஸ்க்கு சிறிய வேடம் என்றாலும், விஜய்யு டன் ஒரு பாடல் காட்சியிலும் நடனமாடுகிறாராம். அதனால், விஜய் படத்திற்கு பிறகு நான் கவனிக்கப்படும் நடிகையாகி விடுவேன் என்று கூறும் இந்த வங்கமொழி நடிகை, விஜய் படத்தில் நடிப்பதை முன்வைத்து புதிய படங்களில் கமிட்டாகவும் பரபரப்பான பேச்சுவார்த்தைகளில் இறங்கியிருக்கிறார்.