தாதாசாகேப் பால்கே பயோபிக் : இரண்டு படங்கள் போட்டி? | மீண்டும் ஹிந்தியில் கீர்த்தி சுரேஷ் | என் அழகான வாழ்க்கை துணை கெனிஷா : ரவி மோகன் அறிவிப்பு | ''பிள்ளைகளுக்காகவே வாழ்கிறேன்; என்னை தங்க முட்டையாகவே பார்த்தனர்'': ரவி மோகன் 'ஓபன் டாக்' | பாலகிருஷ்ணாவிற்கு கதை கூறிய ஆதிக் ரவிச்சந்திரன் | கிஸ் படம் ஜூலை மாதம் வெளியாகிறது | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் | ஈகாவுக்கும், லவ்லிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை : லியோ பட இளம் நடிகர் விளக்கம் | சூரியின் நட்புக்காக மாமன் கேரள புரமோஷனில் கலந்துகொண்ட உன்னி முகுந்தன் | மோகன்லால் பட ரீமேக் : கல்யாணி பிரியதர்ஷனின் வித்தியாசமான ஆசை |
தலைப்பை படிச்சிட்டு சண்டைக்கு வராதீங்க, இது ஒரு சினிமாவோட டைட்டில். இப்பல்லாம் ஏதாவது புதுமை பண்றோம்னு தலைப்புல புதுமை பண்ண ஆரம்பித்துவிட்டார்கள். 'கடலை போட ஒரு பொண்ணு வேணும்', 'உங்களுக்கு ஒழுங்கா கடலை போடத் தெரியுமா', 'வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்' இப்படி ஏராளமான தலைப்புகள் புதுமை செய்ய இருக்கிறது.
இந்தப் படத்தில் அசார் என்ற புதுமுகம் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் யோகிபாபு, மன்சூரலிகான், உமா பத்மநாபன், டாக்டர் ஷர்மிலி உள்பட பலர் நடிக்கிறார்கள். இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹய்னா தயாரித்து, இசை அமைக்கிறார், வம்சிதரன் ஒளிப்பதிவு செய்கிறார். வி.விக்னேஷ் கார்த்திக் இயக்குகிறார்.
“ஏண்டா தலையில எண்ணெய் வெக்கல” என்ற வாக்கியத்தை ஒவ்வொரு இளைஞனும் தன் தாயிடமிருந்து கேட்டிருப்பான். இது பாசத்தின் வெளிப்பாடு. தாயின் பேச்சை கேட்காமல் ஹீரோ தலையில எண்ணெய் வைக்காம வெளியில போகிறார். தலையில் எண்ணை இல்லாத காரணத்தால் ஒரு பிரச்னையில் சிக்கிக் கொள்கிறார். அது என்ன பிரச்னை, அந்த பிரச்னையிலிருந்து எப்படி வெளியே வருகிறார் என்கிற கதை. படப்பிடிப்புகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. முழுநீள காமெடி படம் என்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.