மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
கணீர் குரலோன் சீர்காழி கோவிந்தராஜன் ஒரு பக்தி பழம், சிறந்த பாடகர் என்பதுதான் அதிகம் பேருக்கு தெரியும். ஆனால் அவர் சுயமரியாதை மிக்கவர் என்பது பலர் அறிந்திராத அவரின் மறுபக்கம். அதற்கு இரண்டு உதாரணங்களை இங்கே குறிப்பிடுகிறோம்.
சிவாஜி நடித்த குங்குமம் படத்தில் இடம் பெற்ற பாடல் “சின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தை சொன்னதம்மா...” பலவித பிருகா பிரயோகங்களை வைத்து இசை அமைப்பாளர் மகாதேவன் இந்த பாடலை உருவாக்கி இதனை சீர்காழி கோவிந்தராஜ்தான் இதற்கு பொருத்தமானவர் என்று அவரை பாடவைத்து பாடலை பதிவு செய்துவிட்டார்.
இதை கேள்விப்பட்ட சிவாஜி கொதித்துப்போனார். காரணம் அப்போது சிவாஜிக்கு அனைத்து பாடல்களையும் டி.எம்.சவுந்தர்ராஜன்தான் பாடிக் கொண்டிருந்தார். அதனால் இந்தப் பாடலையும் டி.எம்.எஸ்தான் பாடவேண்டும் என்று உறுதியாக சொல்லிவிட்டார். வேறு வழியில்லாமல் மகாதேவனும் சீர்காழிக்கு பதிலாக டி.எம்.எஸ்சை பாட வைத்தார். விஷயத்தை கேள்விப்பட்ட சீர்காழி கோவிந்தராஜன். சிவாஜிக்கு போன் பண்ணி “அண்ணே மற்றவங்களுக்கு சாப்பாடு போடுங்க வேணாம்னு சொல்லலை. ஆனால் எச்சில் இலையில் போடாதீங்க” என்றார். சிவாஜியையே எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியமும், தன்மானமும் அவருக்கு இருந்தது.
திருவிளையாடல் படத்தில் “ஒரு நாள் போதுமா இன்னொரு நாள் போதுமா...” என்ற பாடல் இடம்பெற்றது. இந்தப் பாடலை சீர்காழி கோவிந்தராஜன்தான் பாட வேண்டும் என்று இயக்குனர் ஏ.பி.நாகராஜன் கேட்டார். அதற்கு சீர்காழி “என் பாட்டு எப்போதும் தோற்காது. தோற்கிற மாதிரியான பாடலை நான் பாட மாட்டேன்” என்று மறுத்துவிட்டார் பின்னர் அந்தப் பாடலை பாலமுரளி கிருஷ்ணா பாடினார். சீர்காழியை எப்படியாவது படத்தில் பாட வைக்க வேண்டும் என்று கருதிய ஏ.பி.நாகராஜன் அவரை படத்தின் முதல் பாடலான “தேவா சம்போ மகாதேவா...” பாடலை பாட வைத்தார்.