சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு |
கமலிடம் பி.ஆர்.ஓ.,ஆக பணிபுரிந்த கிளாமர் கிருஷ்ணமூர்த்தி, மரணம் அடைந்த செய்தியை கேள்விப்பட்டு, அவரது இறுதிசடங்கில் கலந்து கொண்டார் நடிகர் கமல். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமல், எனது குருநாதர் பாலசந்தருக்கு பி.ஆர்.ஓ., ஆக பணிபுரிந்த கிருஷ்ணமூர்த்தி அவர்கள், எனக்கும் பி.ஆர்.ஓ., வாக இருந்ததை எண்ணும்போது பெருமையாக இருக்கிறது. உண்மையில் நல்ல மனிதர். அவருடைய இறந்த செய்தியை கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தார் உட்பட யாரையும் படுத்தாமல் நல்ல சாவு ஏற்பட்டு இருக்கிறது. என்னதான் நல்ல சாவு என்றாலும், அவருடைய இறப்பு இழப்பு தான். நேற்று இரவுவரை கூட என்னைபற்றிய செய்திகள், பத்திரிக்கைகளில் வந்ததை என்னிடம் பகிர்ந்து கொண்டார். நேற்று வரைகூட, அவர் என்னுடைய பி.ஆர்.ஓ., ஆக இருந்து இருக்கிறார். தன்னிலை உணர்ந்த மனிதர். அவருடைய இழப்பை ஈடுசெய்ய முடியாது. அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
கமல் தவிர, டைரக்டர்கள் ராமநாரயணன், சிலந்தி ஆதிராஜ், கலைப்புலி சேகரன், ருக்மங்காதன் உள்ளிட்ட பல்வேறு திரைநட்சத்திரங்களும் கிளாமர் கிருஷ்ணமூர்த்திக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.