கேரளாவில் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு : ரஜினியைப் பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் | மகன் படத்தில் பாடுவாரா விஜய்? | திரையுலகில் 50வது ஆண்டு: பாரதரத்னா விருது பெறுவாரா இளையராஜா? | இந்தியிலும் கலக்கும் ரெஜினா | கையில் கட்டு ஏன்? சண்டையா? வரலட்சுமி விளக்கம் | சூர்யா 46வது படத்தில் விஜய் தேவரகொண்டா? | நாங்கள் ஒரு நல்ல படம் தயாரித்துள்ளோம் : சூரஜ் பஞ்சோலி | '3 பிஎச்கே' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! | தனுஷுக்கு கதை கூறிய டூரிஸ்ட் பேமிலி இயக்குனர்! | 'பிரேக் அவுட்' யோகலட்சுமியின் வெப் சீரிஸ் 22ல் வெளியாகிறது |
விஸ்வரூபம் படத்திற்கு முன்னதாக ஒரு கலகலப்பான படத்தை தன் ரசிகர்களுக்கு விருந்தாக்க நடிகர் கமல்ஹாசன் முடிவு செய்திருக்கிறார். கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் விஸ்வரூபம் படத்தின் பட்ஜெட் பல கோடிகளை தாண்டும். பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட இருப்பதால் படம் உருவாகி, வெளியாக எப்படியும் ஓராண்டுக்கு மேல் ஆகி விடும் என தெரிகிறது. ஏற்கனவே மன்மதன் அம்பு படம் ரிலீசாகி சிலபல மாதங்கள் உருண்டோடி விட்ட நிலையில், அடுத்த படமான விஸ்வரூபம் வெளியாவதற்குள் பெரிய கேப் விழுந்து விடும் என நினைத்த கமல்ஹாசன், விஸ்வரூபத்துக்கு முன்னதாக ஒரு படத்தினை கொடுக்க முடிவு செய்துள்ளார்.
இதற்காக மலையாளத்தில் சமீபத்திய மெகா ஹிட் படமான "டிராஃபிக் படத்தை ரீமேக் செய்யும் திட்டத்தில் இருக்கிறார். ராஜேஷ் பிள்ளை இயக்கத்தில் சீனிவாசன், ரஹ்மான், குஞ்சக்கோ போபன் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம் கமல்ஹாசனை வெகுவாக கவர்ந்துவிட்டது. இதில் ரஹ்மான் ஏற்ற வேடத்தில் நடிக்கத் திட்டமிட்டுள்ளார் கமல். முன் பின் அறிமுகமில்லாத மூவர் சில விஷயங்களில் ஒத்துப்போக, அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றம்தான் கதை. கலகலப்புக்கு பஞ்சமில்லாத இந்த படம் கமல்ஹாசனின் வசூல்ராஜா எம்பிபிஎஸ், தெனாலி, பஞ்சதந்திரம் போன்ற படங்களின் வரிசையில் இடம்பிடிக்கும் என நம்பலாம்.