வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” |

கடந்த ஆண்டில் பல பிரபலங்கள் கிராமங்களை தத்தெடுத்து அடிப்படை வசதிகளை செய்து தர முன்வந்தனர். அதில் இன்று வரை தத்தெடுத்த கிராமங்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தருபவர்கள் மிகச்சிலரே. அந்த வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது பெயரில் துவங்கிய அறக்கட்டளை வாயிலாக கிராமத்தை தத்தெடுத்து நலதிட்ட உதவிகளை செய்து வருகின்றார்.
தெலுங்கானா மாநிலத்தின் மெகபூபு நகர் பகுதியில் கிராமம் ஒன்றின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து பிரகாஷ் ராஜ் அம்மக்களின் அன்பிற்கு பாத்திரமாகியுள்ளார். கம்மடனம் எனும் கிராமத்தில் போர் போட்டு குடிநீர் வசதிக்கு ஏற்பாடு செய்துள்ளார் பிரகாஷ் ராஜ். மேலும் பணிகளை தானே நின்று பிரகாஷ் ராஜ் மேற்பார்வையும் செய்துள்ளார். இன்று(மார்ச் 26) தனது பிறந்த நாள் கொண்டாடும் பிரகாஷ் ராஜ் தனது பிறந்த நாள் பரிசாக கிராம மக்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுத்துள்ளார்.