பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
காமெடி நடிகர் கஞ்சா கருப்புக்கு மதுரையில் இன்று ஆண் குழந்தை பிறந்தது. நடிகர் கஞ்சா கருப்புக்கும், சிவகங்கையை சேர்ந்த சங்கீதா என்ற பிஸியோதெரபி டாக்டருக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடந்ததது. அடுத்தடுத்த சினிமாக்களில் பிஸியாக இருந்த கஞ்சா கருப்பு, திருமணத்துக்கு பிறகு மலேசியாவுக்கு தேனிலவு சென்றார். இந்நிலையில் சங்கீதா கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு இன்று (20-04-2011) காலை சிசேரியன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பிறகு தாயும், குழந்தையும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
குழந்தை பிறந்த தகவல் அறிந்ததும் சென்னையில் இருந்து கஞ்சா கருப்பு மதுரைக்கு விரைந்து வந்தார். குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த அவர் நண்பர்கள் மற்றும் மருத்துவமனையில் இருந்தவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.