சென்னையும்... ‛கப்புள் பிரண்ட்லி' படமும் : இயக்குனர் அஷ்வின் பேட்டி | 'கங்குவா' சாதனையை முறியடிக்குமா 'கமல் ரஜினி ரீ யூனியன்' வீடியோ | தடை போடாதீங்க, என்னை விட்டுவிடுங்க : ‛தாய் கிழவி' விழாவில் சிவகார்த்திகேயன் உருக்கம் | தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்த அசவுகரியம் : டாப்சி | பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கிளப்பும் 'தாய் கிழவி' டிரைலர் | நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா | பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் |

மொஹர்னா அனிதா ரெட்டி சர்வதேச விளம்பர துறையில் மட்டுமின்றி தியேட்டர் நாடகங்களிலும் மிகவும் பிரசித்தி பெற்றவர். இவர் தற்போது உனக்கென்ன வேணும் சொல்லு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார். சிறிய படம் என்ற போதிலும் படமாக்கப்பட்ட விதத்திலும், கதை அமைப்பினாலும் எல்லோரையும் கவரும் உனக்கென்ன வேணும் சொல்லு இந்த மாதம் இறுதியில் உலகெங்கும் வெளி வர உள்ளது.
என்னுடைய கதாபாத்திரம் எளிதில் புரிந்துக் கொள்ளக் கூடிய கதாபாத்திரம் இல்லை. நாம் அன்றாடம் சந்திக்கும் பாத்திரம் தான் என்றாலும் , இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம் அந்தக் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை என்னிடம் விவரிக்கும் போது அந்த பாத்திரத்தின் வீரியத்தை புரிந்துக் கொண்ட நான் அந்த வேடத்தில் நடிக்க போவது யார் என்று அவரிடம் கேட்டு கொண்டே இருந்தேன். கதையை சொல்லி முடித்ததும் தீர்மானமாக சொன்னார் நீ தான் என்று.
சற்றே தயங்கினாலும் அவர் எனக்கு ஊட்டிய தன்னம்பிக்கை காரணமாக அந்த வேடத்தை ஏற்றுக் கொண்டு நடித்தேன். படப்பிடிப்பு முடிந்து , படம் பார்த்த பின்னர் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. திருமணமாகி குழந்தை பேறு இல்லாமல் தவிக்கும் சமுதாயத்தின் மேல் தட்டில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணின் பாத்திரத்தில் நடிக்கிறேன்.அந்த பெண்ணுக்கு சமுதாயத்தில் பேறு இல்லாததால் அவளுக்கு நடக்கும் அவமானங்களும் அதன் தொடர்ச்சியாக அவளுடைய செய்கையும் அந்த செய்கையின் வாயிலாக அவள் ஒரு அமானுஷ்ய சக்திக்கு உயிர் கொடுத்து இருப்பதும் தான் படத்தின் மைய கரு. சமுதாயத்தில தாய் இல்லா பிள்ளைக்கு கிடைக்கும் அரவணைப்பு , பிள்ளை இல்லா தாய்க்கு கிட்டுவதில்லை. அந்த பிரச்சினை தான் நம் கண்ணுக்கு சமுதாய பிணி என்பேன்.