'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. | குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்! | போதைப்பொருள் பயன்படுத்த தனி ரூம் வசதி ; பெண் தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு | வார்-2வில் விஜய்யின் ஸ்டைலை காப்பி அடித்த ஹிருத்திக் ரோஷன் | தள்ளிப்போகும் 'தொடரும்' பட ஓடிடி ரிலீஸ் | ஜெயிலரின் வில்லனாக நடிக்க இருந்தது மம்முட்டி தான் ; ரகசியம் உடைத்த வசந்த் ரவி |
ஒரே படத்துக்கு மூன்றாண்டுகள் கூட எடுத்துக் கொள்ளும் டைரக்டர் பாலா, தனது அவன் இவன் படத்தை ஓரே ஆண்டுக்குள் எடுத்து முடித்து விட்டார் என்று பெருமிதப்பட்டுக் கொண்டிருக்கும் அவன் இவன் குழுவில், ஒரு சிலர் விஷால் மனசு வைத்திருந்தால் இன்னும் சீக்கிரமே படத்தை முடித்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். தாமதத்திற்கு ஏன் விஷால் காரணமானார்? படத்தி்ல் விஷால் ஒன்றரை கண் உடையவராக நடித்துள்ளார். அவர் வரும் குளோஸ்-அப் காட்சிகளை படமாக்கவே நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டனவாம்.
இதுபற்றி விஷால் கூறுகையில், உண்மையிலேயே அவன் இவன் தாமதத்துக்கு காரணம் நான்தான். அவன் இவன் படத்தில் எனக்கு ஒன்றரை கண்! அப்படி நடிக்கறது எவ்வளவு கஷ்டம்னு நடிச்சு பார்த்தால்தான் தெரியும். இப்படி யாராவது வேறு லாங்குவேஜ் படங்களில் நடிச்சிருக்காங்களான்னு தேடினேன். உலக மொழிகள் எதிலேயும் யாருமே அப்படி நடிக்கல. அந்த விதத்தில் எனக்கு பெருமைதான். இந்த மாதிரி நடிக்கும் போது எட்டு ஷாட்டுக்கு மேல் நடிக்க முடியாது. கண்ணு மங்கலாகிடும். அதனால்தான் இந்த படமே லேட்டாச்சு, என்றார்.