வடிவேலு - பஹத்பாசிலின் ‛மாரீசன்' ஆகஸ்ட் 22ல் ஓடிடியில் வெளியாகிறது! | இது ஆரம்பம்தான்: கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட ஆர்த்தி ரவி! | எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது! ஓப்பனாக பேசிய சம்யுக்தா | என்னது, தீபாவளிக்கு இந்த படங்கள் மட்டுமே ரிலீஸா? | ஆக் ஷனுக்கு மாறும் ஹீரோயின்கள் | இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை | தமிழில் ஒரு ரவுண்ட் வருவாரா கெட்டிகா ஷர்மா... | தெலுங்கு சினிமா ஸ்டிரைக்: பஞ்சாயத்தில் சிரஞ்சீவி |
பெருந்துறை : இடுப்பை கிள்ளிய வாலிபரை நடிகை சினேகா திட்டி, எச்சரித்து அனுப்பினார். ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நேற்று நடந்த ஓட்டல் திறப்பு விழாவுக்கு நடிகை சினேகா வந்திருந்தார். நீல வண்ண சேலை அணிந்திருந்தார். கழுத்தில் டாலர் செயின் மட்டும் அணிந்திருந்தார். ஓட்டலை திறந்து வைத்த அவர், ஓட்டல் உரிமையாளருக்கு சொந்தமான ஈமு கோழிப் பண்ணையை பார்வையிடச் சென்றார். அவரைப் பார்க்கவும், மொபைல் போன் கேமராவில் படம் எடுக்கவும் ஏராளமானோர் திரண்டிருந்தனர். பண்ணைக்கு சென்ற அவரை, உள்ளூர் பெண்கள் சிலர் மொபைல் போன் மூலம் படம் எடுக்க அனுமதி கேட்டனர். அவரும் சிரித்தபடி, "போஸ் கொடுத்தார். அப்போது, அவருக்கு பின்புறமாக நின்றிருந்த ஒருவர், அவரது இடுப்பை கிள்ளினார். டென்ஷனான சினேகா, ""அப்போதிருந்தே இடித்துக் கொண்டே இருக்கறீங்கண்ணே, நல்லா இல்லே. இன்னொரு முறை இப்படி செய்யாதீங்க, என்று கடிந்து கொண்டார். உடனிருந்தவர்களும் அந்த வாலிபரை திட்டி, எச்சரித்து அனுப்பினர். சில நிமிடங்கள் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த வாலிபர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.