Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர் முரளி உடல் தகனம்! ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி

08 செப், 2010 - 08:31 IST
எழுத்தின் அளவு:

மாரடைப்பால் மரணமடைந்த நடிகர் முரளியின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் நடிகர் - நடிகைகள், திரையுலக பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டனர். பாலசந்தரின் கவிதாலயா நிறுவன தயாரிப்பில் உருவான பூவிலங்கு படத்தின் மூலம் 1984ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் முரளி. 46 வயதான அவர் பகல் நிலவு, இதயம், அதர்மம், வெற்றி கொடி கட்டு, காலமெல்லாம் காதல் வாழ்க, அள்ளித்தந்த வானம், சுந்தரா டிராவல்ஸ், தேசியகீதம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். இவர் நேற்று அதிகாலை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக முரளியின் உடல் வைக்கப்பட்டுள்ளது. முரளியின் மரணச் செய்தியறிந்த கோலிவுட் பிரபலங்கள் பலரும் முரளியின் வீ்ட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

நடிகர் முரளி பிரபல கன்னட பட தயாரிப்பாளர் சித்தலிங்கையாவின் மகன் ஆவார். முரளியின் தந்தை கன்னடர் என்றாலும் அவரது தாய் ஒரு தமிழ்ப்பெண். பெங்களூருவில் பிறந்த இவர், சினிமாத்துறைக்கு வந்த பின்னர் தமிழ்நாட்டிலேயே இருந்தார். தமிழ் தவிர பிற மொழி படங்களில் நடிக்காதவர் என்ற பெருமையும் முரளியை சேரும்.

நடிகர் முரளி கடைசியாக நடித்த படம் பானா காத்தாடி. முரளியின் மகன் அதர்வா நாயகனாக அறிமுகம் ஆன இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தான் நடித்த பெரும்பாலான படங்களில் கல்லூரி மாணவராக நடித்த முரளி, கடைசியாக நடித்த பானா காத்தாடியிலும் எம்.பி.பி.எஸ். நான்காம் ஆண்டு மாணவராக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மகன் நடித்த முதல் படமே முரளிக்கு கடைசி படமாக அமைந்து விட்டது திரையுலகில் பெரும் ‌சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திரையுலகை சேர்ந்தவர்கள், பத்திரிகையாளர்கள், நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் என யார் அழைப்பிதழ் வைத்தாலும் நேரில் சென்று வாழ்த்துவதை வாடிக்கையாக கொண்டிருந்த முரளியின் மரணம் அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.

நடிகர் முரளி கடல்பூக்கள் படத்திற்காக 2001ம் ஆண்டு தமிழக அரசின் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றிருக்கிறார். முரளிக்கு ஷோபா என்ற மனைவியும், அதர்வா, ஆகாஷ் என்ற மகன்கள் மற்றும் காவ்யா என்ற மகள் உள்ளனர். மகள் காவ்யா எம்.பி.பி.எஸ். படித்து முடித்துள்ளார். அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த நடிகர் முரளி, கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் திருமணம் பேசி முடித்துள்ளார். மே மாதம் பிரமாண்டமாக திருமண விழாவை நடத்த திட்டமிட்டிருந்தாராம் முரளி. அதற்குள் இப்படியொரு சோக முடிவு ஏற்பட்டு விட்டது என்று முரளியின் உறவினர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

முரளியின் இறுதிச்சடங்குகள் இன்று நடைபெறுகிறது. காலை 10.45 மணியளவில் வளசரவாக்கம் வீட்டில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டது. மதியம் 1 மணியளவில் பெசன்ட்நகர் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் நடிகர், நடிகைகள், திரையுலக பிரமுகர்கள், நண்பர்கள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

நடிகர் முரளி இறுதி அஞ்சலி படங்கள்



நடிகர் முரளி நடித்துள்ள படங்கள் முழு விவரம்


Advertisement
கருத்துகள் (493) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (493)

வினோத்.J - keelakkurichi, pattukkottai,,இந்தியா
11 அக், 2010 - 15:27 Report Abuse
 வினோத்.J ரியலி இட்ஸ் டு ஹார்ட்
Rate this:
முத்துலட்சுமி - tuticorin ,இந்தியா
11 அக், 2010 - 11:23 Report Abuse
 முத்துலட்சுமி ஒரு நல்ல மனிதனை, நல்ல நடிகரை இழந்து விட்டோம். இறைவனிடம் சேர நான் பிராத்திக்கிறேன்
Rate this:
ஜெயப்ரகாஷ் - vellore,இந்தியா
22 செப், 2010 - 08:26 Report Abuse
 ஜெயப்ரகாஷ் The whole Cinema field missed the Good and Best Actor. He is the only person who didn't teach about the sex, terrorism etc., I feel very Proud about him. My deep condolance to Murali Sir. Sir We won't miss You Sir. We can see You in the form of Atharva.
Rate this:
sujai - visakhapatnam,இந்தியா
21 செப், 2010 - 18:40 Report Abuse
 sujai ஒரு நல்ல மனிதரை சினிமா உலகம் இழந்து விட்டது , இவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்வோம் ...
Rate this:
கார்த்திகா trupali - melbourne,ஆஸ்திரேலியா
21 செப், 2010 - 12:00 Report Abuse
 கார்த்திகா trupali முரளி சார் இன் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் உள்ள இறைவனை பிராதிக்கிறேன். ரஜினி ன் பெயரை போடுவதற்கு இது உள்ள விளம்பர செய்தி அல்ல இது மரண செய்தி!
Rate this:
மேலும் 488 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in