மார்ஷல் படத்தில் வில்லன் யார்... | கருப்பு படத்தில் நடிக்க மறுத்த சிம்பு.? | ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‛தமா': தீபாவளிக்கு ரிலீசாகிறது | ஒரே மாதத்தில் கோட்டா சீனிவாசராவின் மனைவியும் மறைந்தார்! | சிக்கந்தர் தோல்வி: சல்மான்கான் மீது நேரடியாக குற்றம் சாட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்! | நெகட்டிவ் விமர்சனங்களால் ‛கூலி' வசூல் பாதிப்பா? திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | ஆபரேஷன் சிந்தூரில் வீர மரணம் அடைந்த முரளி நாயக் வாழ்க்கை சினிமாவாகிறது | அதிக வசூல் இயக்குனர்களில் முதலிடத்தில் லோகேஷ் கனகராஜ் | ஹீரோயின் ஆகும் ஆசை இல்லை: 'கூலி' மோனிகா பிளெஸ்சி | 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி |
மலையாள நடிகைகள் தமிழில் புகழ் பெற்று விளங்குவதும், தமிழ் நடிகைகள் தெலுங்கில் புகழ் பெற்று விளங்குவதும் சமீப காலமாக இருந்து வருகிறது. கடந்த பத்து வருடங்களாக சென்னையைச் சேர்ந்த பெண்கள்தான் தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையராக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். முன்பு த்ரிஷா, கடந்த சில வருடங்களாக சமந்தா, தற்போது ரெஜினா அங்கு முன்னணியில் இருக்கிறார்கள்.
தமிழில் 'மௌனம் பேசியதே' படத்தின் மூலம் அறிமுகமான த்ரிஷா, தெலுங்கில் 'நீ மனசு நாக்கு தெலுசு' என்ற படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து 'வர்ஷம், நூவொஸ்தாவன்டே நேநொன்தன்டானா, ஸ்டாலின், சைனிக்குடு, அந்தவாரி மாடலுக்கு அர்தாரி வேருலே,' என பல வெற்றிப் படங்களில் நடித்து அங்கு நம்பர் 1 நடிகையாக வலம் வந்தார்.
அவருக்கு அடுத்து, தமிழில் 'விண்ணைத் தாண்டி வருவாயா' படம் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமான சமந்தா, தெலுங்கில் 'யே மாய சேசுவே' படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, “பிருந்தாவனம், தூக்குடு, ஈகா, சீதம்மா வாகிட்லோ சிறுமல்லி சேத்து, அத்தாரின்டிக்கி தாரேதி, மனம்” ஆகிய வெற்றிப் படங்களில் நடித்து இப்போதும் அங்கு நம்பர் 1 ஆக இருந்த கொண்டிருக்கிறார். தற்போது தமிழ், தெலுங்கில் தலா ஒரு படங்களில் நடித்து வருகிறார்.
சமந்தாவிற்கு அடுத்து, தற்போது தெலுங்கில் முன்னேறிக் கொண்டு வரும் நடிகையாக ரெஜினா கஸ்ஸன்ட்ரா இருக்கிறார். தமிழில் பிரியா இயக்கிய 'கண்ட நாள் முதல்' படத்தில் லைலாவின் தங்கையாக அறிமுகமானவர் ரெஜினா. 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து அதிகம் கவனிக்கப்பட்டவர். தெலுங்கில், 'சிவா மனசுலோ ஸ்ருதி' என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து “கொத்த ஜன்டா, ரா ரா கிருஷ்ணய்யா, பவர், பில்ல நுவ்வு லேனி ஜீவிதம்” ஆகிய வெற்றிப் படங்களில் நடித்து வட இந்திய நடிகைகளை விடவும், சமந்தா போன்றோரை விடவும் வேகமாக முன்னேறி வருகிறார்.