மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா |
கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம், உத்தமவில்லன் மற்றும் விஸ்வரூபம் -2 என வரிசை கட்டி படங்கள் வெளிவர உள்ள நிலையில், அவர் அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார் என்று தகவல் தெரிவிக்கின்றன. இதனை மெய்ப்பிக்கும் வகையிலேயே, மகள் ஸ்ருதிஹாசனின் கேள்விக்கு கமல் பதிலளித்துள்ளார்.
அதில் கமல் கூறியுள்ளதாவது, என்னுடைய அடுத்த படம் குறித்து ஏற்கனவே முடிவெடுத்து விட்டேன். அதற்கு "வாமமார்க்கம்" என்று பெயரிட்டுள்ளேன். வாமமார்க்கம் என்றால் எனக்கு தெரிந்தவரை, இடது கை பாதை என்று பொருள். ஆனால், சிலர் அகோரிகளை, வாமமார்ஜிகள் என்று கூறுகிறார்கள். அது மதம் சம்பந்தப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியினரை, நம்நாட்டில் இடதுசாரிகள் என்று அழைக்கிறோம். ஒவ்வொருவருக்கும் இதுகுறித்து பல்வேறு கருத்துக்கள் உள்ளதால், இதை படமாக்கலாம் என்று நினைத்துள்ளேன்.