பழம்பெரும் தெலுங்கு நடிகர் காந்தா ராவ் (86) ஐதராபாத்தில் காலமானார். சில ஆண்டுகளுக்கு முன்பு புற்று நோயால் பாதிக்கப்பட்ட காந்தா ராவ், அதற்காக வீட்டிலிருந்தவாறே சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் உடல்நிலை மோசமானதால் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (22ம்தேதி) காலமானார்.
நடிகர் காந்தா ராவ் தெலுங்கில் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஆந்திர மாநிலம் குடிபந்தா என்ற கிராமத்தில் 1923ம் ஆண்டு பிறந்த இவர், 1951ம் ஆண்டு "நிர்தோஷி' என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். அவர் நடித்த பல திரைப்படங்களில் எம்.ஜி.ஆரைப் போல வாள் சண்டை போடுவார். இதனால் ஆந்திர எம்.ஜி.ஆர். என்று ரசிகர்கள் அழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.