மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
தனது படங்களுக்கு வித்தியாசமான தமிழ்ப்பெயர் சூட்டுபவர் டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன். தமிழில் பெயர் சூட்டும் படங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பதற்கு முன்பிருந்தே தமிழ் பெயர்களை சூட்டிய இவர், தனது புதிய படம் ஒன்றிற்கு நடுநிசி நாய்கள் என்று பெயரிட்டிருக்கிறார். புதுமுகம் வீரா நடிக்கும் இப்படத்தில் நாயகியாக சமீரா ரெட்டி நடிக்கிறார். க்ரைம் - த்ரில்லர் கதையம்சத்துடன் உருவாகி வரும் இப்படத்தில் பாடல்களை கிடையாதாம். தற்போது இறுதிகட்ட சூட்டிங்கில் இருக்கிறது நடுநிசி நாய்கள். மறைந்த பிரபல எழுத்தாளர் சுந்தர ராமசாமி, பசுவய்யா என்ற பெயரில் எழுதிய கவிதைகளில் புகழ்பெற்ற கவிதையொன்றின் பெயர் நடுநிசி நாய்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தலைப்பைப் போலவே படமும் கவித்துவத்துடன் இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.