2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |
என்னை வாழ வைக்கும் தமிழர்களுக்கு ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டேன், என்று நடிகை நமீதா கூறியுள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள திரைப்பட விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நமீதா, எவ்வளவு பணம் கொடுத்தாலும் இலங்கை செல்ல மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார். எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகுக்கு அறிமுகமானவர் நமீதா. குஜராத்தை சேர்ந்த இந்த ஆறடி உயர குதிரை ஏய், பில்லா, அழகிய தமிழ் மகன், ஜெகன்மோகினி உள்பட 20 தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
தமிழ் ரசிகர்களை மச்சான் என்று அழைப்பதுடன் தனது கவர்ச்சியால் கட்டிப் போட்டிருக்கும் நமீதாவை இலங்கையில் நடைபெறவிருக்கும் திரைப்பட விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்காக ஒரு பெரிய தொகையை கொடுக்கவும் இலங்கை அரசும், சர்வதேச இந்திய பட விழா நிர்வாகமும் முன்வந்திருக்கிறது. ஆனாலும் அந்த விழாவில் நடனம் ஆடுவதற்கு நமீதா மறுத்திருக்கிறார்.
இதுபற்றி நமீதா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
இலங்கையில் நடைபெறும் சர்வதேச இந்திய படவிழாவில் நடனம் ஆடுவதற்காக, என்னை அழைத்தார்கள். அதற்காக, ஒரு பெரிய தொகையை தருவதாகவும் ஆசை காட்டினார்கள். ஆனால், அதற்கு நான் சம்மதிக்கவில்லை. தமிழர்களுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் பிரச்சினை இருப்பது தெரிந்த பிறகும், நான் எப்படி அந்த பட விழாவுக்கு போக முடியும்? இன்று நான் இந்த அளவுக்கு பிரபல நடிகையாக இருப்பதற்கு, தமிழ் மக்கள்தான் காரணம். அதனால், இலங்கை பட விழாவில் பங்கேற்க ஆரம்பத்திலேயே மறுத்து விட்டேன். தமிழர்களின் நலனுக்கு எதிரான எந்த நிகழ்ச்சியிலும், நான் கலந்துகொள்ள மாட்டேன்.
இவ்வாறு நமீதா கூறியுள்ளார்.