டாக்சிக் படத்தில் இணைந்த ருக்மணி வசந்த் | அர்ஜூன் தாஸிற்கு ஜோடியான ஐஸ்வர்ய லட்சுமி | வடிவேலு - பஹத்பாசிலின் ‛மாரீசன்' ஆகஸ்ட் 22ல் ஓடிடியில் வெளியாகிறது! | இது ஆரம்பம்தான்: கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட ஆர்த்தி ரவி! | எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது! ஓப்பனாக பேசிய சம்யுக்தா | என்னது, தீபாவளிக்கு இந்த படங்கள் மட்டுமே ரிலீஸா? | ஆக் ஷனுக்கு மாறும் ஹீரோயின்கள் | இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை |
1980ம் ஆண்டு வெளிவந்த நிழல்கள் படத்தில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் ரோகினி. பூங்கதவே தாழ் திறவாய்... என்ற வைரமுத்துவின் வரிகளுக்கு எளிமையான அழகு சேர்த்தவர். பாரதிராஜாவின் அறிமுகங்களில் பெரிய அளவில் வளரமுடியாமல் போனவர்கள் நிழல்கள் ரோகினியும், என் உயிர் தோழன் ரமாவும் தான்.
நிழல்கள் படத்திற்கு பிறகு சரியான வாய்ப்புகள் இல்லாமல் போகவே சில வருடங்களுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். முறைப்படி நடனம் கற்றிருந்த ரோகினி அங்கு நடனப்பள்ளி நடத்துகிறார். தற்போது சென்னையில் ஒரு நாட்டிய நாடகம் நடத்துவதற்காக வந்துள்ளார்.
வந்தவர் நேராக பாரதிராஜாவை சந்தித்து வாழ்த்தும், ஆசியும் பெற்றிருக்கிறார். மீண்டும் நடிக்க சம்மதமா என்று கேட்டிருக்கிறார் பாரதிராஜா. அதற்கு ரோகினியும் சம்மதம் தெரிவித்திருக்கிறார். அனேகமாக பாரதிராஜாவின் அடுத்த படமான நேற்று மழை பெய்யும் படத்தில் ரோகினி நடிக்கலாம் என்று தெரிகிறது. 34 வருடங்களுக்கு பிறகு சினிமாவுக்கு திரும்பும் ரோகினி இன்னும் அப்படியே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: நிழல்கள் படத்தில் நடிக்கும்போது நான் 9வது வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அடுத்தடுத்து படிப்பில் கவனம் செலுத்தியதால் நடிப்பு பக்கம் வரவில்லை. கை கொடுக்கும் கை படத்திலும், புன்னகை மன்னன் படத்திலும் ரேவதி நடித்த கேரக்டர்கள் எனக்கு வந்தவைதான். அப்போது அதை தவற விட்டதை நினைத்து இப்போது வருந்துகிறேன். மீண்டும் பாரதிராஜா சாரை சந்தித்தபோது நடிக்கிறீயா என்று கேட்டார். உங்க படம்னா நடிக்கிறேன் சார்னு சொல்லியிருக்கேன். என்கிறார் ரோகினி.