பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா | 'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு |
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மோனிகா. அழகி படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து பகவதி, சண்டக்கோழி உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர், சிலந்தி படத்தின் மூலம் கவர்ச்சி நாயகியாகவும் உருவெடுத்தார். தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வந்த மோனிகா, திடீரென இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். மேலும் தனது பெயரையும் எம்.ஜி.ரஹிமா என்று மாற்றியுள்ளதோடு, சினிமாவுக்கும் முழுக்கு போட முடிவெடுத்துள்ளார்.
இதுகுறித்து மோனிகா கூறியுள்ளதாவது, இஸ்லாம் மதத்தின் கொள்கைகள் எனக்கு பிடித்து இருந்தது. 2010ம் ஆண்டே மதம் மாற முடிவெடுத்தேன். ஆனால் அது இப்போது தான் நடந்துள்ளது. எனது அம்மா இந்து மதத்தை சேர்ந்தவர், அப்பா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். இருவரது சம்மதத்துடன் தான் மதம் மாறியுள்ளேன். விரைவில் நான் நடித்த கடைசி படமான நதிகள் நனைவதில்லை படம் திரைக்கு வர இருக்கிறது. இந்தப்படத்தோடு சினிமாவுக்கு முழுக்கு போட உள்ளேன். இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.