ரெட்ரோ, டூரிஸ்ட் பேமிலி : முன்பதிவு நிலவரம் | 30 ஆண்டுகளுக்குப் பிறகு அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு நன்றி சொன்ன தேவயானி | மகனுக்காக படம் தயாரிக்காதீர்கள் : தயாரிப்பாளர்களுக்கு பேரரசு வேண்டுகோள் | 12 படங்களில் நடித்தும் ஒரே ஒரு படம் தான் வெளியாகி உள்ளது : புதுமுக நடிகை வருத்தம் | பிளாஷ்பேக் : எதிர்ப்புகளால் மாற்றப்பட்ட ரஜினி படத்தலைப்பு | பிளாஷ்பேக் : டி.எஸ்.பாலையா ஹீரோவாக நடித்த 'சண்பகவல்லி' | பஹல்காம் தாக்குதல்: நடிகர் அஜித் கண்டனம் | அப்பாவுக்கு பத்மஸ்ரீ, மகனுக்கு பத்மபூஷன் | நிறைவுக்கு வரும் 'குட் பேட் அக்லி' ஓட்டம் | அக்டோபரில் 'பாகுபலி' ரீரிலீஸ் |
நான்காவது தூணில் மூன்றாவது கண்...! உள்ளது உள்ளபடி இனி கேப்டன் செய்திகளில் மட்டுமே! போன்ற பஞ்ச் வசனங்களுடன் கேப்டன் டி.வி., தனது சோதனை ஒளிபரபப்பை தொடங்கியுள்ளது. அரசியிலில் முக்கிய கட்சிகளிடம், கூட்டணி இல்லாமல் தனியாக போட்டியிட தயாரா? என்று சவால் விட்ட விஜயகாந்த், இப்போது முன்னணி கட்சிகளின் சேனல்களுக்கு போட்டியாக பஞ்ச் டயலாக்களை பேசத் தயாராகி விட்டார். தே.மு.தி.க.வுக்கு என தனி சேனல் தேவை என தொண்டர்கள் விரும்பியதால் கேப்டன் டி.வி., விரைவில் உதயமாகும் என அறிவித்த விஜயகாந்த், அதற்கான வேலைகளில் விறுவிறுப்பாக இறங்கி சோதனை ஒளிபரப்பையும் எட்டி விட்டார்.
நான்காவது தூணில் மூன்றாவது கண்... கேப்டன் டி.வி., என்பது போன்ற பஞ்ச் டயலாக்களுடன் ஓடிக் கொண்டிருக்கும் கேப்டன் டிவியில், ஏப்ரல் 14ம்தேதி முதல் வார நாட்களில் தொடர்கள், திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகலில் திரைப்படங்கள், சனி மற்றும் ஞாயிறு நாட்களில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பிறமொழிப் படங்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர். முன்னணி சேனல்களுக்கு போட்டியாக பல புதிய படங்களை மடக்க இப்போதே முன்னணி சினிமா நட்சத்திரங்களுடன் 'கேப்டன் டீம்' பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாகவும் தகவல்.