தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
தெலுங்கில் நடித்துக் கொண்டிருந்த மதுமிதா பார்த்திபன் இயக்கிய குடைக்குள் மழை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு அமுதே, நாளை, ஆணிவேர், உள்பட பல படங்களில் நடித்தார். இங்கிலீஸ்காரன் படத்தில் நடித்த போது உடன் நடித்த சிவபாலாஜியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தமிழில் கடைசியாக யோகி படத்தில் ஹீரோயினாக நடித்தார். தற்போது காதல் மெய்ப்பட என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மன்னன் மகள் என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: சின்னத்திரை வாய்ப்புகள் என்னை விடாமல் துரத்திக் கொண்டேதான் இருந்தது. திருமணமான புதிதில் ராதிகா மேடம்கூட கூப்பிட்டாங்க. எனக்குதான் சின்ன தயக்கம் இருந்தது. அதற்குள் பையன் பிறந்திட்டான் அவனை கவனிக்க வேண்டியது இருந்தது. இப்போ அவன் ஸ்கூல் போக ஆரம்பிச்சிட்டான். தெலுங்குல சில டி.வி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினேன். அப்போதான் டி.வியோட ரீச் தெரிஞ்சுது. இப்போது துணிச்சலா சீரியல்ல நடிக்க வந்துட்டேன். என் கணவர் தெலுங்கு சினிமால பிசியா நடிக்கிறார். வார நாட்களில் சென்னையில் நடித்து விட்டு சனி, ஞாயிறில் ஐதராபாத்துக்கு பறந்திடுவேன். என்கிறார் மதுமிதா.