கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சினிமா பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் (87) மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அவரது உடல் நிலை நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த டி.எம்.எஸ்., உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் சிகி்ச்சை அளித்தனர். ஞாபக சக்தி குறைந்ததால் பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. உடலில் உப்பின் அளவு குறைந்து விட்டதாலும், மூளை நரம்பில் பாதிப்பு ஏற்பட்டதாலும் ஞாபக சக்தி குறைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். டாக்டர்களின் தொடர் சிகிச்சையால் டி.எம்.எஸ். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அவரது உடல்நிலை தற்போது நன்றாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.