ரூ.100 கோடி வசூலை கடந்த எம்புரான் | இயக்குனர் அவதாரம் எடுக்கும் ஹிருத்திக் ரோஷன் | காதல் எப்போதுமே வெற்றி பெறும் : திரிஷா வெளியிட்ட பதிவு | ஜி.வி.பிரகாஷின் பிளாக்மெயில் படத்திற்கு இசையமைக்கும் சாம் சி.எஸ் | மனைவி சங்கீதாவுக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு நடத்திய ரெடின் கிங்ஸ்லி | சிக்கந்தர் பட பிரமோஷன் : கிளாமர் காஸ்ட்யூமில் காஜல் அகர்வால் | ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஓடிடி-யில் மாஸ் காட்டும் சூப்பர் ஹிட் படம் | சமுத்திரகனி கதை நாயகனாக நடிக்கும் 'பைலா' | பெப்சிக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு | உ.பி.முதல்வர் யோகியின் வாழ்க்கை சினிமா ஆகிறது |
தனது கானா பாடல்கள் மூலமும், அக்மார்க் சென்னை முகச்சாயல் மூலமும் திடீர் புகழ்பெற்றவர் கானா பாலா. அட்டகத்தியில் ஆடி போனா ஆவணி அவள் ஆளை மயக்கும் தாவணி என்று பாடி வந்தவருக்கு இப்போது அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. "என்னைய ஹீரோவோ போட்டு யாராவது படம் எடுங்களேன்" என்று மேடைக்கு மேடை தமாஷ் பண்ணிக் கொண்டிருந்தவர் இப்போது நிஜமாகவே ஹீரோவாகிறார்.
விஜய்யின் ஆரம்பகால படங்களான நினைத்தேன் வந்தாய், பிரியமானவளே, வசீகரா ஆகியவற்றை இயக்கியவர் செல்வபாரதி, நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கப்போகும் படம் பாரீஸ் கார்னர். இந்தப் படத்தில்தான் கானா பாலா ஹீரோவாக நடிக்கிறார்.
சென்னைக்கு வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் எல்லாம் பெரிய ஆளாகிவிட்டார்கள். செல்வ செழிப்பில் இருக்கிறார்கள். ஆனால் சென்னையின் பூர்வகுடி மக்கள் இப்போதும் வறுமையில்தான் இருக்கிறார்கள், கூவத்தின் கரையில் வாழ்கிறார்கள் என்பதை சொல்லப்போகும் படம். அதில் கானா பாலா பாரீஸ் கார்னரில் சைக்கிள் ரிக்ஷா ஓட்டுபவராக நடிக்கிறார். படத்தில் வரும் அத்தனை பாடல்களும் கானா பாட்டுதான், அவரே பாடுகிறார்.