ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது | ரூ.200 கோடியை தொட்ட தொடரும் | மூன்று நகைச்சுவை நடிகர்கள் மோதும் மே 16 | என்டிஆர் குடும்பத்தின் நான்காவது தலைமுறை நடிகர் அறிமுகம் | அப்பா இசையில் முதல் தெலுங்குப் பாடல் பாடிய யுவன்ஷங்கர் ராஜா | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - செப்டம்பர் 18 வெளியீடு | தற்போதைய தமிழ் சினிமா இசை - அனுராக் காஷ்யப் கிண்டல் | ரூ.100 கோடி வசூலைக் கடந்த அஜய் தேவ்கனின் 'ரெய்டு 2' |
பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவின் மகன் கலாபிரபு. சக்கரகட்டி படத்துக்கு பிறகு நீண்ட இடைவெளிவிட்டு இப்போது டைரக்ட் செய்து வரும் படம் இந்திரஜித். சக்கரகட்டியில் பாக்யராஜ் மகன் சாந்தனுவை அறிமுகப்படுத்தினார். இதில் கார்த்திக் மகன் கவுதமை நடிக்க வைக்கிறார். ஹீரோயின் மும்பையைச் சேர்ந்த சோனரிகா. மும்பையில் இருந்து வந்து இறங்கியிருக்கிறார் சோனரிகா. சினிமாவுக்கு புதுசு. ஆளவந்தான், விஸ்வரூபம் படங்களுக்கு இசை அமைத்த சங்கர் இஷான் ராய் மியூசிக். ராசாமதி கேமராமேன்.
ஆக்ஷன் அட்வென்ஜ்சர் ஸ்டோரி. இந்தியா முழுக்க டிராவல் ஆகிற கதையாம். பிரதாப் போத்தன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் ஷூட்டிங் தொடங்கியது. காஷ்மீர், உ.பி. அருணாச்சலம் பிரதேசம் பகுதிகளில் ஷூட்டிங் நடக்க இருக்கிறது. கலைப்புலி எஸ்.தாணுவின் வி.கிரியேஷன் பெரிய பட்ஜெட்டில் படத்தை தயாரிக்கிறது.