தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது |
டைரக்டர் பாலாவுக்கு நான் கடவுள் படம் தேசிய விருதை பெற்றுத் தந்துள்ளது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் பாலா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த தேசிய விருதை எனது குரு பாலுமகேந்திராவுக்கு சமர்ப்பிக்கிறேன், என்றார். மேலும் அவர் கூறியதாவது:-
என்னை விட மிகப்பெரிய இயக்குனர்கள் மணிரத்னம், பாலுமகேந்திரா, கே.பாலசந்தர், பாரதிராஜா போன்றவர்கள் தமிழ் திரையுலகில் இருக்கிறார்கள். தேசிய விருது கிடைத்திருப்பதை நினைக்கும்போது எனக்கு பெருமையாகவும் இருக்கிறது; கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது. இறக்கை கட்டி பறப்பது போல் இருக்கிறது. அதே நேரம் இந்த விருது எனக்கு கிடைத்ததற்காக என்னை விட அதிகம் சந்தோஷப்படும் இரண்டு ஜீவன்கள் இருக்கிறார்கள். ஒருவன் என் குரு பாலுமகேந்திரா, இன்னொருவர் பாலுமகேந்திராவின் மனைவி அகிலாம்மா. இந்த தேசிய விருதை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
நான் எப்போதுமே எனக்கு விருது கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்த்து படம் எடுக்க மாட்டேன். நான் கடவுள் படத்தையும் விருது எதிர்பார்ப்புடன் எடுக்கவில்லை. என்னை நம்பி வந்த நடிகர் - நடிகைகளுக்கு, தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது கிடைக்க வேண்டும் என நினைப்பேன். என்னைவிட அவர்கள்தான் வெயிலிலும், மழையிலும் கஷ்டப்பட்டார்கள். பூஜா முகம் முழுக்க கறுப்பு மை பூசி, கண்களில் லென்ஸ் வைத்து கஷ்டப்பட்டு நடித்தார். அவர்களுக்கெல்லாம் விருது கிடைக்கவில்லையே என்கிற வருத்தம் இருக்கிறது.
என்னுடைய அடுத்த படம் பற்றி எல்லோரும் கேட்கிறார்கள். இனிமேல் நீ இருட்டு ஏரியாவுக்குள் போகக்கூடாதுன்ன இளையராஜாவும், பாலு மகேந்திராவும் என்னிடம் சத்தியம் வாங்கியிருக்கிறார்கள். அதுபோன்ற படங்களை இனி இயக்க மாட்டேன். இனி நான் இயக்கும் படங்கள் சராசரி மனிதர்களைப் பற்றியதாக இருக்கும்.
இவ்வாறு டைரக்டர் பாலா கூறினார்.