சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி | 'மிஸ்டர்.பாரத்' படப்பிடிப்பு நிறைவு : லோகேஷ் கனகராஜ் நேரில் வாழ்த்து | நிவின் பாலி மீது பணமோசடி வழக்கு |
இன்றைய இளம் இசை அமைப்பாளர்களுக்கு ஒரு பாட்டுக்கு மெட்டு வரவேண்டும் என்றால் கேரளாவின் படகுவீட்டுக்கு போக வேண்டும் அல்லது வெளிநாட்டு பனிமலைகளுக்கு செல்ல வேண்டும். குறிப்பாக ஹாரிஸ் ஜெயராஜ், நேற்று வந்த அனிருத் இவர்களுக்கெல்லாம் படத்துக்கு மியூசிக் போட வேண்டும் என்றால் கடல் கடந்து சென்றால்தான் முடியும். கோடிக் கணக்கில் சம்பளத்தையும் கொடுத்துவிட்டு தயாரிப்பாளர் இதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
இசை என்பது ரசித்து செய்ய வேண்டிய ஒன்று நான் ஒரு படத்துக்கு பின்னணி இசை அமைக்க நான்கு மாதங்கள் வரை எடுத்துக் கொள்வேன் என்று அண்மையில் ஹாரிஸ் ஜெயராஜ் கூறியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக நேற்று (டிசம்பர் 14) நடந்த ஒரு ஊர்ல என்ற படத்தின் ஆடியோ விழாவில் இளையராஜா பேசினார். அதன் சுருக்கம் இது...
நான் எப்போதுமே புதியவர்களுக்கு நிறைய வாய்ப்பு கொடுப்பேன். அப்படித்தான் இந்தப் படத்தின் தயாரிப்பாளரும், டைரக்டரும் என்னிடம் வந்தார்கள். படத்தை எடுத்து முடித்திருந்தார்கள். படத்தை பார்த்துவிட்டு அது பிடித்திருந்ததால் இசை அமைக்க ஒப்புக்கொண்டேன். இரண்டே நாளில் இசை அமைத்து படத்தை அவர்கள் கையில் கொடுத்து விட்டேன்.
இந்தப் படம் மட்டுமல்ல எந்தப் படத்துக்கும் பின்னணி இசை அமைக்க நான் மூன்று நாட்களுக்கு மேல் எடுத்துக் கொண்டதில்லை. சில்வர் ஜூப்ளி படமாக இருந்தாலும் சரி, 100 நாள் ஓடிய படமாக இருந்தாலும் சரி என் தியேட்டரில் இருப்பது இரண்டு அல்லது மூன்று நாட்கள்தான்.
அந்தக் காலத்திலேயே புதியவர்களுக்கு இசை அமைத்திருக்கிறேன். என் பெயர் அவர்களுக்கு பயன்பட்டிருக்கிறது. இப்போதும் அமைத்துக் கொடுக்கிறேன். சிலர் அவர்கள் படத்துக்கெல்லாம் இசை அமைக்கிறீர்களே என்பார்கள். நான் இசை அமைத்து நீ பெரிய ஆளா வந்த மாதிரி அவரும் வந்துவிட்டு போகட்டுமே என்பேன். உணக்கான இடம் உனக்கு அவருக்கான இடம் அவருக்கு என்று சொல்லிவிடுவேன்.
இப்போதும் புதியவர்களே தைரியமாக வாருங்கள் நான் இருக்கிறேன்.
இவ்வாறு இளையராஜா பேசினார்.