அடுத்த ஐந்து மாதங்களுக்கு வரப் போகும் புதுப் படங்கள் அசத்துமா? | பாலியல் குற்றவாளிகளுக்கு இந்த மாதிரி தண்டனை வழங்க வேண்டும் : வரலட்சுமி | கமலின் 'விக்ரம்' பட வசூலை முறியடிக்குமா 'தக்லைப்'? | சூரி உடன் நடித்தது பெருமை : ஐஸ்வர்யா லட்சுமி | நினைத்து கூட பார்க்கவில்லை : அதிதி ஷங்கர் | ரெட்ரோ' வில் காட்சிகள் நீக்கம் : பாலிவுட் நடிகர் வருத்தம் | 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவான நவீன் சந்திரா | இரு மொழி படம் இயக்கும் விஜய் மில்டன் | நாளை படப்பிடிப்புகள் நடக்கும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு | பிளாஷ்பேக்: பாடலுக்காக திரைக்கதையை மாற்றிய கே.எஸ்.ரவிகுமார் |
நடிகர், "மாஸ்டர் ஸ்ரீதர், 60, மாரடைப்பால் மரணமடைந்தார். குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர், "மாஸ்டர் ஸ்ரீதர். "கர்ணன், கந்தன் கருணை, குறத்திமகன், முருகன் அடிமை, பகவான் ஐயப்பன் உட்பட, 150, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும், நாடகங்களிலும் நடித்துள்ளார். முன்னாள் நடிகையான, "பேபி இந்திரா, இவர் மனைவி; இவர்களுக்கு, 2 மகன்கள் உள்ளனர். சென்னை, கொட்டிவாக்கம், கற்காம்பாள் நகரில் வசித்து வந்த ஸ்ரீதர், சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்றார்; நேற்று அதிகாலை, மாரடைப்பால் இறந்தார். இவரது உடலுக்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், தலைவர் சரத்குமார், செயலர் ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், குட்டி பத்மினி உட்பட, பல நடிகர், நடிகைகள் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி சடங்கு, நேற்று மாலை, சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடந்தது.