தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் |
முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்று வேலூர் சிறையில் இருப்பவர் பேரறிவாளன். இவர் அடிப்படையில் ஒரு எழுத்தாளர். அவர் இதுவரை எழுதியுள்ள கதைகள், கட்டுரைகள், சிறை அனுபவங்களை புத்தகமாக வெளியிட முடிவு செய்துள்ளார். அதற்கு சிறை அதிகாரிகள் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் பேரறிவாளன் சிறையில் இருந்தபடியே ஒரு சினிமாவுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். அதை தங்க மீன்கள் ராம் திரைப்படமாக எடுக்க உள்ளார். இதற்காக அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு எழுத்தாளர் பாமரனுடன் வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளனை சந்தித்து பேசினார்.
பின்னர் ராம் இதுபற்றி கூறியதாவது: பேரறிவாளனை நான் சிறையில் சந்திப்பது புதிதல்ல. அன்பு, நட்பு நிமித்தமாக சந்தித்தேன். பேரறிவாளனுக்கும் படுகொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு நிரபராதியாக அவர் தண்டனை அனுபவித்து வருகிறார். மரண தண்டனைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் இருக்கிறேன். பேரறிவாளன் கதை ஒன்றையும் திரைப்படமாக்கும் முயற்சியில் இருக்கிறேன். இதுகுறித்து அவரிடம் பலமுறை பேசியிருக்கிறேன் என்றார்.