விளம்பர படப்பிடிப்பின் போது ஜூனியர் என்டிஆருக்கு காயம்! | விடைப்பெற்றார் ரோபோ சங்கர்; கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் பிரியாவிடை | 'டிரெயின்' படத்திற்காக களத்தில் இறங்கிய தாணு! | 'ஓ.ஜி' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | 'மகுடம்' படத்தில் துஷாரா விஜயன் சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு! | லோகேஷ் அழைத்தால் கண்ணை மூடிக்கொண்டு நடிப்பேன் : அர்ஜுன் தாஸ் | காந்தாரா சாப்டர் 1க்கு டப்பிங் பேசிய ருக்மணி வசந்த் : செப்., 22ல் டிரைலர் ரிலீஸ் | ரூ.100 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் மதராஸி | சென்னையில் மழை : படகு சவாரி கேட்ட பூஜா ஹெக்டே | பேரனுக்கு நாளை(செப்.,19) காது குத்து விழா வைத்திருந்த நிலையில் ரோபோ சங்கர் மரணம் |
ஒரு காலத்தில் மேடையில் கச்சேரி செய்வதையே இளையராஜா கடுமையாக விமர்சித்து வந்தார். இப்போது அவரே மேடை கச்சேரிகள் செய்ய ஆரம்பித்து விட்டார். தற்போது வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் சென்று இசை நிகழ்ச்சி நடத்துகிறார். லண்டன், கனடா, அமெரிக்க நாடுகளைத் தொடர்ந்து இப்போது வருகிற 28ந் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் கச்சேரி நடத்துகிறார்.
இதற்காக தன் மகன் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, மகள் பவதாரிணி, மற்றும் தன் குழுவினர் 50 பேருடன் நேற்று ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றார். செல்லும் முன் அவர் நிருபர்களிடம் கூறியது இது...
"முன்பெல்லாம் வெளிநாட்டில் இசை நிகழ்ச்சி நடத்த யாருக்கும் ஆர்வம் இல்லை. ஏன்னா அதுக்கு நிறைய செலவாகும். செலவு பண்ண யாரும் தயாரா இல்லை. வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் அங்கு வசதியா இருக்காங்க. அவர்களுக்கு நம் மண்ணோட இசை கேக்குற ஆசை வந்திருக்கு. அதனால இப்போ நிறைய ஸ்பான்சருங்க இசை நிகழ்ச்சி நடத்த முன் வர்றாங்க. எல்லா நாட்டிலேயும் என்னை வரச் சொல்றாங்க. அழைக்கிற இடத்துக்கு போகலேன்னா இருந்து என்ன பிரயோஜனம். அதான் வெளிநாடுகளுக்கு போறேன்.
ஏற்கெனவே கச்சேரிகள்ல பாடின பாட்டத்தான் பாடப்போறேன்னாலும் ஒவ்வொரு கச்சேரிக்கும் முன்னாடி கடுமையா ரிகர்சல் பண்ணிப் பார்த்துட்டுதான் போறேன். ஏன்னா சினிமா இசைங்கற லேசுப்பட்டதில்ல. பல வாத்திய கருவிளோட, இசையும் சரியா சேரலைன்னா மியூசிக் டிராபிக் ஜாம்மாயிடும்" என்றார்