பாலியல் குற்றவாளிகளுக்கு இந்த மாதிரி தண்டனை வழங்க வேண்டும் : வரலட்சுமி | கமலின் 'விக்ரம்' பட வசூலை முறியடிக்குமா 'தக்லைப்'? | சூரி உடன் நடித்தது பெருமை : ஐஸ்வர்யா லட்சுமி | நினைத்து கூட பார்க்கவில்லை : அதிதி ஷங்கர் | ரெட்ரோ' வில் காட்சிகள் நீக்கம் : பாலிவுட் நடிகர் வருத்தம் | 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவான நவீன் சந்திரா | இரு மொழி படம் இயக்கும் விஜய் மில்டன் | நாளை படப்பிடிப்புகள் நடக்கும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு | பிளாஷ்பேக்: பாடலுக்காக திரைக்கதையை மாற்றிய கே.எஸ்.ரவிகுமார் | பிளாஷ்பேக் : மருங்காபுரி சிவபாக்கியத்தின் நூற்றாண்டு |
நடிகை அசின் மீண்டும் விஜய்யுடன் ஜோடி போடப்போகிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக அவருக்கு ரூ.80 லட்சம் சம்பளம் பேசியிருக்கிறார்களாம். ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கும் புதிய படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறார். இந்த படத்தின் நாயகனாக நடிகர் விஜய் நடிக்க, அவருக்கு ஜோடியாக அசின் நடிக்க உள்ளார். கஜினி படம் மூலம் இந்தியில் கால் பதித்த அசின், அடுத்து நடித்த லண்டன் ட்ரீம்ஸ் படம் ஏமாற்றத்தை தந்ததால் தமிழில் மீண்டும் தலைகாட்ட ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் வந்த வாய்ப்பை விட்டு விடக்கூடாது என நினைத்த அசின் முதலில் ரூ.1 கோடி சம்பளம் கேட்டவர் பின்னர் ரூ.80 லட்சத்திற்கு சம்மதித்திருக்கிறாராம். விஜய் - அசின் ஜோடி ஏற்கனவே போக்கிரி படத்தில் ஜோடி போட்டு ஜெயித்தவர்கள் என்பது நினைவிருக்கிறதுதானே!