பாலியல் குற்றவாளிகளுக்கு இந்த மாதிரி தண்டனை வழங்க வேண்டும் : வரலட்சுமி | கமலின் 'விக்ரம்' பட வசூலை முறியடிக்குமா 'தக்லைப்'? | சூரி உடன் நடித்தது பெருமை : ஐஸ்வர்யா லட்சுமி | நினைத்து கூட பார்க்கவில்லை : அதிதி ஷங்கர் | ரெட்ரோ' வில் காட்சிகள் நீக்கம் : பாலிவுட் நடிகர் வருத்தம் | 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவான நவீன் சந்திரா | இரு மொழி படம் இயக்கும் விஜய் மில்டன் | நாளை படப்பிடிப்புகள் நடக்கும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு | பிளாஷ்பேக்: பாடலுக்காக திரைக்கதையை மாற்றிய கே.எஸ்.ரவிகுமார் | பிளாஷ்பேக் : மருங்காபுரி சிவபாக்கியத்தின் நூற்றாண்டு |
தமிழில் முன்னணி நடிகையாக இருந்த அசின் கஜினி ரீமேக் மூலம் இந்திக்கு போனார். ஒரு படத்திலேயே இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
இதையடுத்து சல்மான்கான், அஜய்தேவ்கானுடன் நடிக்க வாய்ப்பு வந்தது. பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்ததால் வசிப்பிடத்தை சென்னையில் இருந்து மும்பைக்கு மாற்றினார். மும்பையிலேயே வீடு வாங்கி தாய், தந்தையுடன் தங்கினார். இந்தி பிரபல நடிகை ஸ்ரீதேவி வசிக்கும் அபார்ட்மெண்டில் தான் அசின் வீடு வாங்கி இருக்கிறார் என்பது கூடுதல் தகவல். தமிழ் படங்களில் நடிக்க பலர் அழைப்பு விடுத்தும் அசின் மறுத்து விட்டார். இந்த நிலையில் லண்டன் டீரீம்ஸ் படம் கஜினி போல் பெரிதாக பேசப்படவில்லை. பெரிய படவாய்ப்புகளும் கிடைக்காததினால், மீண்டும் தமிழ்படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். சமீபத்தில் கலைமாமணி விருது பெற சென்னை வந்தபோது விஜய் ஜோடியாக புதுப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். அப்படத்தை ராஜா இயக்குகிறார். ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. ஏற்கனவே விஜய்யும், அசினும் “சிவகாசி, போக்கிரி” படங்களில் இணைந்து நடித்துள்ளனர். ஆஸ்கார் பிலிம்சின் தசாவதாரம் படத்தில் அசின் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.