
ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா...
சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட "கில்லி" படம் 12 கோடிக்கு மேல் வசூலித்து புதிய சாதனை படைத்தது. இதை தொடர்ந்து அஜித் நடித்த "மங்காத்தா" படத்தை ரீ ரிலீஸ் செய்ய இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது "பில்லா" படத்தை வெளியிட இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். அஜித்தின் பிறந்த நாளான மே முதல் தேதியில் தமிழ்நாடு முழுவதும் 150க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள். ஏடிஎம் புரொடக்ஷன் என்ற நிறுவனம் வெளியிடுகிறது.
1980ம் ஆண்டு ரஜினி, ஸ்ரீப்ரியா நடித்த "பில்லா" படம், 2007ம் ஆண்டு அஜித் நடிப்பில் ரீமேக் ஆனது. இதில் நயன்தாரா, நமீதா நடித்திருந்தார்கள். விஷ்ணுவர்தன் இயக்கி இருந்தார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார், யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். இரண்டு படங்களுமே பெரிய வெற்றி பெற்றது. தற்போது ரீ ரிலீஸில் கில்லி சாதனையை முறியடிக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
அதேசமயம் மே 1ல் மங்காத்தாவும் வெளியாகலாம் என தெரிகிறது. ஒரேநாளில் இரண்டு அஜித் படங்கள் ரீ-ரிலீஸ் ஆகுமா... அல்லது வேறு தேதியில் மங்காத்தா வெளியாகுமா என்பது இனி வரும் நாட்களில் தெரியவரும்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!