Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தெலுங்கை தொடர்ந்து தமிழில் வெளியாக தயாராகும் 'பிரேமலு'

12 மார், 2024 - 11:32 IST
எழுத்தின் அளவு:
Premalu-to-be-released-in-Tamil-after-Telugu


மலையாளத்தில் கடந்த பிப்ரவரியில் ஒவ்வொரு வாரமும் வெளியான படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றி படங்களாக மாறின. அதிலும் பெரிய முன்னணி நட்சத்திரங்கள் யாரும் இல்லாத நிலையில் வெளியான மஞ்சும்மேல் பாய்ஸ் என்கிற படம் கேரளாவை போலவே தமிழகத் திரையரங்குகளிலும் வெளியாகி அதே அளவு வரவேற்பு மற்றும் வசூலுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக பொங்கல் ரிலீஸுக்கு பிறகு ரசிகர்கள் கூட்டத்திற்காக காத்துக் கிடந்த தமிழக திரையரங்குகளுக்கு கோடையில் பெய்த மழையாக இந்த படம் மாறி உள்ளது.

இந்த படம் மலையாளத்தில் வெளியாவதற்கு சில வாரங்களுக்கு முன்பு 'பிரேமலு' என்கிற படம் வெளியானது. காதல் கதையாக அதேசமயம் வித்தியாசமான கோணத்தில் உருவாகி இருந்த இந்த படம் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சமீபத்தில் 100 கோடி வசூல் கிளப்பிலும் இணைந்துள்ளது. இதைத்தொடர்ந்து தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இயக்குனர் ராஜமௌலியின் மகன் கார்த்திகேயா மூலமாக கடந்த வாரம் தெலுங்கிலும் ரிலீஸ் செய்யப்பட்டது.

அங்கேயும் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தமிழிலும் இந்த படத்தை மொழிமாற்றம் செய்து வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றனவாம். வரும் தமிழ் புத்தாண்டிற்கு தான் தமிழில் பெரிய படங்கள் வெளியாகலாம் என்கிற நிலையில் 'பிரேமலு' படம் இந்த சமயத்தில் தமிழகத்தில் வெளியாகும்போது மலையாளம் மற்றும் தெலுங்கில் பெற்ற அதே வரவேற்பையும் வசூலையும் பெறும் என்கிற திட்டத்துடன் தான் இந்த படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய இருக்கிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நட்பா ? காதலா ? மீண்டும் ரசிகர்களை பரபரப்பாகிய ராஷ்மிகாவின் புகைப்படம்நட்பா ? காதலா ? மீண்டும் ரசிகர்களை ... மஞ்சும்மேல் பாய்ஸ் - ஜெயமோகன் கருத்துக்கு இயக்குனர் உன்னிகிருஷ்ணன் எதிர்ப்பு மஞ்சும்மேல் பாய்ஸ் - ஜெயமோகன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)