Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழில் வெளியாகும் புதிய வெப் தொடர்

20 பிப், 2024 - 01:35 IST
எழுத்தின் அளவு:
A-new-web-series-in-Tamil


பிற மொழிகளை ஒப்பிடும்போது தமிழில் வெப் தொடர்கள் வெளியாவது மிகவும் குறைவே. இந்த நிலையில் 'ஹார்ட் பீட்' என்ற புதிய வெப் தொடர் தமிழில் தயாராகி உள்ளது. இந்த தொடர் வருகிற மார்ச் 8ம் தேதி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. இந்த தொடர் கொரியன் மொழியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'ஹார்ட் பீட்' தொடரின் தழுவல் என்றும் கூறப்படுகிறது.

முழுக்க முழுக்க மருத்துவமனை பின்னணியில் உருவாகும் இந்த தொடர், மருத்துவமனையில் பணியாற்றும், டாக்டர்கள், செவிலியர்கள், நிர்வாகிகள், அவர்களுடன் நோயாளிக,ள் அவர்களின் உறவினர்கள் ஆகியோருக்கு இடையிலான உணர்வுபூர்வமான விஷயங்களை சித்தரிக்கிறது.

கதையின் நாயகியாக தீபா பாலு நடிக்கிறார், தலைமை டாக்டராக அனுமோல் நடிக்கிறார். இவர்கள் தவிர யோகலக்ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மண், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியான்ஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் ஆகியோர் நடிக்கின்றனர். டெலி பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. தீபக் சுந்தர்ராஜன் இயக்குகிறார். ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த சீரிஸுக்கு சரண் ராகவன் இசையமைத்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தமிழ் இயக்குனர்களை மலையாள படம் இயக்க விடுவதில்லை: ஆர்.வி.உதயகுமார் குற்றச்சாட்டுதமிழ் இயக்குனர்களை மலையாள படம் ... பூந்தமல்லியில் 500 கோடியில் திரைப்பட நகரம்: அரசுக்கு தயாரிப்பாளர் சங்கம் நன்றி பூந்தமல்லியில் 500 கோடியில் திரைப்பட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)