Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனுஷ் 51வது படத்தின் வெளிநாட்டு உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

11 பிப், 2024 - 02:25 IST
எழுத்தின் அளவு:
Dhanushs-51st-films-foreign-license-is-a-popular-company!


தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் தனது 51வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தற்காலிகமாக 'DNS' என அழைக்கப்படுகிறது. இதில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜூனா, ஜிம் சார்ப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டமாக ஹைதராபாத், திருப்பதி, கோவா போன்ற பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பே முடிவடையாத நிலையில் தற்போது இதன் வெளிநாட்டு உரிமையை டிரீம் என்டர்டெயின்மென்ட் என்கிற பிரபல விநியோக நிறுவனம் பெரும் தொகைக்கு வாங்கியதாக அறிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் இணைந்த டான் பட கூட்டணி!மீண்டும் இணைந்த டான் பட கூட்டணி! ‛கொலைவெறி' பாடல் ‛3' படத்தை விழுங்கிவிட்டது: ஐஸ்வர்யா வருத்தம் ‛கொலைவெறி' பாடல் ‛3' படத்தை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)