முதன்முறையாக இமான் இசையில் பின்னணி பாடிய மனோ | பாகுபலி 3ம் பாகம் உருவாகும் : உறுதிப்படுத்திய ராஜமவுலி | மலையாள இயக்குனர் சங்கீத் சிவன் காலமானார் | உலகில் புடவையை விட சிறந்த ஆடையில்லை - ஆலியா பட் | கல்கி 2898 ஏ.டி படத்தில் மகேஷ் பாபு? | அமிதாப் பச்சனுக்கு அடுத்து எனக்கு தான் : கங்கனா பெருமிதம் | ‛டிராவல் ஏஜென்ட்' படத்தை துவக்கி வைத்து ஹீரோவை அறிமுகம் செய்த தர்மேந்திரா | எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபலம் | நடிகைகளின் பாராட்டு மழையில் மஞ்சும்மேல் பாய்ஸ் | குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சலசலப்பு : வெளியேறிய நாஞ்சில் விஜயன் |
திருமணத்திற்கு பிறகும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பரவலாக நடித்து வருகிறார் காஜல் அகர்வால். தெலுங்கில் பாலகிருஷ்ணா உடன் அவர் நடித்திருந்த பகவந்த் கேசரி என்ற படம் அக்டோபர் 19ம் தேதி திரைக்கு வந்த நிலையில், அடுத்து கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் -2 படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது தெலுங்கில் சத்தியபாமா என்ற ஒரு படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார் காஜல் அகர்வால். போலீஸ் அதிகாரி வேடத்தில் அவர் நடிக்கும் இந்த படத்தை சுமன் சிக்கலா என்பவர் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதன் டீசர் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு போலீஸ் உடையில் காஜல் அகர்வால் கம்பீரமாக தோன்றும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்கள். இப்படம் தவிர உமா என்ற ஒரு ஹிந்தி படத்திலும் அவர் கதையின் நாயகியாக தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.