Advertisement

சிறப்புச்செய்திகள்

மோசடி வழக்கில் நயன்தாரா பட இயக்குனர் கைது | வித்தியாசமான ஹேர்ஸ்டைலுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ் | ரிலீஸ் செய்ய மறுத்த ஆத்திரத்தில் பேஸ்புக்கில் படத்தை வெளியிட்ட டொவினோ தாமஸ் பட இயக்குனர் | கார் விபத்தில் சிக்கிய லியோ நடிகரின் குடும்பம் ; உறவினர் ஒருவர் பலி | இயக்குனரின் கணவர் பேட்டியால் சிக்கலில் மம்முட்டி | அன்று… இன்று… புகைப்படங்களைப் பகிர்ந்து நன்றி சொன்ன விஜய் கனிஷ்கா | மகாபலிபுரத்தில் முடிந்த 'மேக்ஸ்' படப்பிடிப்பு | 'டாக்சிக்' படத்தின் கதாநாயகி கியாரா அத்வானி | 'வடக்கன்' தலைப்புக்கு சென்சார் எதிர்ப்பு | இயக்குனர் விக்ரமனின் மகனை வாழ்த்திய விஜய், ரஜினி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சித்தார்த்துடன் வந்தபோது ஓடி ஒளியாமல் துணிச்சலாக போஸ் கொடுத்த அதிதி ராவ்

04 ஜூன், 2023 - 10:54 IST
எழுத்தின் அளவு:
Aditi-Rao-bravely-posed-without-hiding-when-she-came-with-Siddharth

நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதரி இருவருமே கடந்த சில வருடங்களாகவே நெருங்கிய நட்பில் இருந்து வருகிறார்கள் என்பாத்து தெரிந்தது தான். அதேசமயம் தங்களுக்குள் இருக்கும் காதலை வெளிப்படையாக அறிவிக்கவும் தங்களை காதலர்களாக வெளிப்படுத்திக் கொள்ளவும் தயக்கம் காட்டி வருகின்றனர் என்பதும் பல இடங்களில் வெளிப்பட்டுள்ளது. குறிப்பாக இவர்கள் வெளியூரில் ஹோட்டல் மற்றும் ஸ்பா ஆகிய இடங்களுக்கு காரில் வந்து இறங்குவது போன்ற வீடியோக்களும் தங்கள் முகத்தை மறைத்தபடி, கேமராக்களை தவிர்த்து விட்டு வேக வேகமாக செல்லும் வீடியோக்களும் கூட வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் சமீபத்தில் விமான நிலையத்திற்கு சித்தார்த்தும் அதிதி ராவும் ஜோடியாகவே வந்துள்ளனர். முகத்தில் மாஸ்க் அணிந்தபடி தனது லக்கேஜ்களை ட்ராலியில் தள்ளிக்கொண்டு யாரையும் கவனிக்காமல் சித்தார்த் வேகமாக செல்ல, அவருக்கு சில அடிகள் தூரத்தில் பின்னால் வந்த அதிதி ராவ் தன்னை புகைப்படம் எடுத்த பலருக்கும் நின்று நிதானமாக போஸ் கொடுத்தார்.

அவரிடம் சித்தார்த்துடன் சேர்ந்து நில்லுங்கள் என கேட்டதற்கு நாகரீகமாக மறுத்துவிட்டு படம் எடுத்தவர்களுக்கு பை சொல்லியபடி கவுண்டரில் நின்றிருந்த சித்தார்த்துடன் இணைந்து கொண்டதுடன் தனது கைப்பையையும் சித்தார்த்தின் லக்கேஜ் ட்ராலியில் வைத்தபடி விமான நிலையத்திற்குள் சென்றார் அதிதி ராவ். இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது விரைவில் இவர்கள் தங்களது காதலை வெளிப்படையாக அறிவிப்பார்கள் என உறுதியாக எதிர்பார்க்கலாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சினிமாவில் ஒவ்வொரு நாளும் போராட்டமே - ஐஸ்வர்ய லட்சுமிசினிமாவில் ஒவ்வொரு நாளும் போராட்டமே ... லண்டனில் செம ஸ்டைலான கெட்டப்பில் சிம்பு! வைரலாகும் புகைப்படம் லண்டனில் செம ஸ்டைலான கெட்டப்பில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)