இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
இப்போதெல்லாம் அஜீத் யாரை சந்தித்தாலும், விடைகொடுத்து அனுப்பும்போது "வாழுங்கள், வாழ விடுங்கள்" என்று கடைசியாக சொல்லித்தான் அனுப்புகிறாராம். ஆட்டோகிராப் போடும்போதும் "வாழு வாழவிடு" என்று எழுதியே கையெழுத்துப் போடுகிறார்.
அஜீத்தின் அடுத்த படத்தை விஜயா புரொடக்ஷ்ன் நிறுவனம் தயாரிக்கிறது. சிறுத்தை சிவா இயக்குகிறார். இந்தப் படத்தில் அஜீத் 5 தம்பிகளுக்கு அண்ணனாக நடிக்கிறார். அவரது தம்பிகளாக நடிக்க நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. இதுவரை விதார்த், பாலா சுஹைல், முனீஸ் ஆகியோர் தேர்வாகி உள்ளனர். இதில் முனீஸ் சமீபத்தில் அஜீத்தை சந்தித்து தனது நன்றியை தெரிவித்தார்.
இதுகுறித்து முனீஸ் கூறியதாவது: நான் அவரை சந்தித்து நன்றி கூற விரும்பினேன். "இதற்காக நேரத்தை வீணடிக்க வேண்டாம், படப்பிடிப்பில் சந்திப்போம்" என்று சொன்னார். நான்தான் விடாப்பிடியாக அவரை சந்திக்க நேரம் கேட்டுப்போனேன். என்னை தேர்வு செய்ததே அவர்தான் என்பது அன்றுதான் எனக்குத் தெரியும். நான் அவருக்கு நன்றி சொன்னதும். அவர் எனக்கு சில அறிவுரைகளை கூறினார். அதை என் இதயத்தில் எழுதி வைத்திருக்கிறேன். அவர் சொன்னது இதுதான்.
"கடுமையாக உழைக்க வேண்டும், நாணயமாக வரி கட்ட வேண்டும், மூத்தவர்களை மதித்து நடக்க வேண்டும். மூத்தவர்களுடன் நிறைய நேரம் செலவிட வேண்டும். வருமானத்தின் ஒருபகுதியை இயலாதவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் கொடுக்க வேண்டும். அடுத்தவர் வாழ்வில் உன் கருத்தை திணிக்ககூடாது. உன் வாழ்வில் அடுத்தவர் கருத்தை திணிக்க அனுமதிக்ககூடாது. நீ யாருடன் பழக வேண்டும், பணி செய்ய வேண்டும் என்பதை பணம் தீர்மானிக்க கூடாது, உன் மனம் தீர்மானிக்க வேண்டும். வாழு வாழவிடு. இது என் அறிவுரை அல்ல அனுபவம்" இப்படிச் சொல்லி கைகொடுத்து விடைகொடுத்து அனுப்பினார்.
இவ்வாறு முனீஸ் கூறினார்.