Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முதல் முறையாக ரஜினியுடன் இணையும் பிரபல காமெடி நடிகர்

05 ஏப், 2023 - 01:51 IST
எழுத்தின் அளவு:
Thambi-ramaiah-joins-rajinikanth-movie

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் லால் சலாம். இந்த திரைப்படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்து வருகின்றனர். இப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்திலும் நடிக்க உள்ளார் கிரிக்கெட் அரசியலை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு செஞ்சியில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தில் பிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரான தம்பி ராமையா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு ரஜினியுடன் காம்பினேஷன் காட்சிகள் படமாக்க உள்ளன. ரஜினிகாந்த் தற்போது நடந்து வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு லால் சலாம் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சம்பளத்தை உயர்த்திய ஜெயம் ரவிசம்பளத்தை உயர்த்திய ஜெயம் ரவி 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த நரேன் - மீரா ஜாஸ்மின் 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)