Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'வாரிசு' இசை வெளியீடு: ஏமாற்றத்தில் விஜய் ரசிகர்கள்

23 டிச, 2022 - 12:53 IST
எழுத்தின் அளவு:
'Varisu'-audio-launch:-Vijay-fans-disappointed

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், தமன் இசையமைப்பில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வாரிசு'. இப்படத்தின் இசை வெளியீடு நாளை (டிசம்பர் 24ம் தேதி) சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் எப்படியாவது அனுமதிச் சீட்டு வாங்கி கலந்து கொள்ள வேண்டும் என விஜய் ரசிகர்கள் பலரும் முயற்சித்து வருகிறார்களாம். ஆனால், ஒரு மாவட்டத்திற்கு வெறும் 100 பேருக்கு மட்டுமே அனுமதி என்று ரசிகர் மன்றத்தில் சொல்லிவிட்டார்களாம். சரி, நேரிலாவது வர முடியவில்லை, அப்போதே உடனுக்குடன் 'யு டியூப் லைவ்' மூலம் பார்க்கலாம் என்று ஆசைப்பட்டவர்களுக்கும் ஏமாற்றம்தான் கிடைக்கும் எனத் தெரிகிறது.

படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு நல்ல விலைக்கு விற்றுவிட்டார்களாம். 2023 புத்தாண்டு நிகழ்ச்சியாக அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் திட்டம் உள்ளதாம். அதனால், 'வாரிசு' இசை வெளியீட்டு நிகழ்ச்சியை ஒரு வாரம் கழித்து மட்டுமே பார்க்க வேண்டிய சூழ்நிலை விஜய் ரசிகர்களுக்கு. நிகழ்ச்சியை மொபைல் போன் மூலம் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுபவர்களின் கணக்குகளை முடக்கவும் திட்டம் வைத்துள்ளார்களாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நடிகர் ஆர்.கே.சுரேஷின் மனைவி மாதவிக்கு வளைகாப்பு விழா! மிஷ்கின்-கவுதம் கார்த்திக் பங்கேற்பு!நடிகர் ஆர்.கே.சுரேஷின் மனைவி ... சர்வதேச திரைப்பட விழா நிறைவு: சிறந்த நடிகராக விஜய்சேதுபதி, நடிகையாக சாய்பல்லவி தேர்வு சர்வதேச திரைப்பட விழா நிறைவு: சிறந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)