Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நவம்பரில் வெளியாகும் சந்தானத்தின் ஏஜென்ட் கண்ணாயிரம்!

09 அக், 2022 - 05:48 IST
எழுத்தின் அளவு:
Santhanam's-Agent-Kannayiram-to-release-in-November!

சந்தானத்தின் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக பட குழு அறிவித்துள்ளது. அதோடு இந்த படத்தின் இரண்டு நிமிட மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதில் சந்தானம் நடித்துள்ள ஆக்சன், காமெடி, மற்றும் குதிரையில் ஏரி அமர்ந்து அவர் செல்லும் காட்சிகள் என இடம்பெற்றுள்ளன.

இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன் நடிக்க முனீஸ்காந்த், புகழ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். மனோஜ் பிதா இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஏஜென்ட் கண்ணாயிரம் படம் நவம்பரில் திரைக்கு வர இருப்பதாக அந்த மேக்கிங் வீடியோவில் தெரிவித்துள்ளார்கள். இந்த படத்தை தொடர்ந்து தற்போது பிரசாந்த் ராஜ் என்பவர் இயக்கும் கிக் என்ற படத்தில் சந்தானம் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆர்.கண்ணன் இயக்கும் படத்தில் நடிக்கும் ஹன்சிகா!ஆர்.கண்ணன் இயக்கும் படத்தில் ... காட்பாதர் வெற்றி - நயன்தாரா வெளியிட்ட அறிக்கை! காட்பாதர் வெற்றி - நயன்தாரா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)