Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூர்யாவின் வணங்கான் படம் கிடப்பில் போடப்படவில்லை! -நடிகர் ஷீகான் ஹுசைனி தகவல்

09 அக், 2022 - 03:30 IST
எழுத்தின் அளவு:
Actor-Shihan-Hussaini-said-Suriya's-Vanangaan-movie-is-not-shelved-shooting-to-resume-soon


பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் வணங்கான் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடிக்கிறார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் வணங்கான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பு பெற்றது. மேலும் இப்படத்தில் சூர்யா காது கேட்காத வாய் பேச முடியாத மீனவர் வேடத்தில் நடிக்கிறார்.

ஆனால் முதல் கட்ட படப்பிடிப்புக்கு பிறகு இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படவே இல்லை. அதன் காரணமாகவே வணங்கான் படம் கிடப்பில் போடப்பட்டு விட்டதாக ஏற்கனவே ஒரு முறை செய்தி வெளியானது. அப்போது அதை மறுக்கும் வகையில் பாலாவுடன் தான் இடம்பெற்ற புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் சூர்யா. என்றாலும் அதன் பிறகு அவர் இப்போது வரை வணங்கான் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. மாறாக, சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் வணங்கான் கிடப்பில் போடப்பட்டு விட்டதாக மீண்டும் செய்திகள் வெளியாகத்தொடங்கி விட்டன.

இந்த நேரத்தில் வணங்கான் படத்தில் நடிக்கும் நடிகர்களில் ஒருவரான ஷீகான் ஹுசைனி வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், வணங்கான் படம் கிடப்பில் போடப்படவில்லை. அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. நானும் அப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதால் அதற்காக என்னை தயார் படுத்தி வருகிறேன் என்று தெரிவித்து இருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நாகார்ஜூனாவை இயக்கும் மோகன் ராஜா?நாகார்ஜூனாவை இயக்கும் மோகன் ராஜா? ஹீரோயினை மோசமான வார்த்தையால் திட்டிய கஞ்சா கருப்பு: மேடையில் பரபரப்பு ஹீரோயினை மோசமான வார்த்தையால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)