Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கத்திற்கு நடிகர் உதயா கண்டனம்

02 அக், 2022 - 05:26 IST
எழுத்தின் அளவு:
Actor-Udhaya-condemns-dismissal-from-actors-association

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பதிவான ஓட்டு எண்ணிக்கையை நடத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் இரண்டரை ஆண்டுகளாக நடிகர் சங்க தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படாமல் இருந்தன. இதனையடுத்து கடந்த மார்ச் 20ம் தேதி நடிகர் சங்கத்தின் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்று பதவியேற்று கொண்டனர்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகர் சங்கத்தின் சார்பில் கே.பாக்யராஜ்க்கு நோட்டீஸ் அனுப்பட்டது. அதில் புதிதாக பொறுப்பேற்று கொண்ட நிர்வாகம் மற்றும் நடிகர் சங்க தேர்தல் குறித்து உண்மைக்கு புறம்பான பொய்யான கருத்துகளை நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் பரப்பி வருவதாகவும், இதனால் கே.பாக்யராஜ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் சங்க உறுப்பினர்கள் கடிதம் அனுப்பி வருவதாக பாக்யராஜ், நடிகர்கள் உதயா, பாபி ஆகியோருக்கு கடிதம் அனுப்பி இருந்தது.

மேலும் ஏன் உங்களை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க கூடாது என விளக்கம் கேட்டு 15 நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என நடிகர் சங்கத்தின் சார்பாக பாக்யராஜ் மற்றும் ஏ.எல்.உதயாவுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க விதி 13-ன் படி சங்கத்திற்கு எதிராக உறுப்பினர்கள் யாரும் செய்தி வாயிலாகவே அல்லது உறுப்பினர்களுக்கு கடிதம் வாயிலாகவோ கருத்து சொல்லக் கூடாது என விதி உள்ளதால் நடிகர் சங்கத்தில் இருந்து பாக்யராஜ் மற்றும் உதயா உள்ளிட்ட இருவரையும் ஆறு மாத காலத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டனர்.

நீக்கப்பட்டது குறித்து நடிகர் உதயா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நடிகர் சங்கத்தில் இருந்து நீக்குவது தொடர்பாக தன்னிலை விளக்க கடிதம் கிடைத்த போதே அதிர்ச்சியாக இருந்தது. தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்று கருதப்படும் பாக்யராஜ் போன்ற ஜாம்பவானுக்கு தன்னிலை விளக்க கடிதம் அனுப்பியதே வருத்தத்திற்குரிய விஷயம் எனும் போது நீக்கியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். தன்னிலை விளக்க கடிதத்திற்கு பதில் விளக்க கடிதம் அளிக்கப்பட்டது. மேலும், நேரில் வந்து விளக்கம் அளிக்கவும் தயாராக இருக்கிறேன் என்று கூறினேன். இருந்தபோதும் நான் இப்போது நீக்கப்பட்டுள்ளேன்.

என்னையும் சக நடிகரான பாபியையும் நீக்கியது கூட பெரிதில்லை. ஆனால் அனைவராலும் பெரிதும் மதிக்கப்படும் பாக்கியராஜை நீக்கியது மிகவும் வருத்தமளிக்கிறது. அவர் கடந்த தேர்தலின் போது தலைவராக போட்டியிட்டதற்காக அவரை நீக்கியது பெரும் குற்றம். இது ஒரு தவறான முன்னுதாரணம் மற்றும் மிகவும் கண்டிக்கத்தக்கது. சங்கத்தில் இருந்து எங்களை நீக்கியிருப்பது தற்போது இருக்கும் நிர்வாகிகளின் பழிவாங்கும் எண்ணத்தையே காட்டுகிறது. பழிவாங்கும் எண்ணம் இப்போது உள்ள நிர்வாகிகளிடம் ஆரம்பம் முதலே இருந்துள்ளது. கடந்த முறை பதவியில் இருந்த போது எதுவாக இருந்தாலும் பேசி தீர்க்கலாம் என்று கூறினோம். ஆனால் அதை கேட்காமல் நலிந்த நாடக கலைஞர்கள் உட்பட பலரை நீக்கி அவர்களது வருத்தத்தை சம்பாதித்தனர்.

கேள்வி கேட்பவர்கள் அனைவரையும் நீக்குகிறார்கள். சரத்குமார் அணியை கேள்வி கேட்க உருவாக்கப்பட்டது தான் பாண்டவர் அணி. ஆனால் அவர்கள் (சரத்குமார் அணி) யாரையும் நீக்கவில்லை. சங்க கட்டட பணிகள் முழுமையாக நடைபெறவில்லை, உறுப்பினர்களின் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. பழிவாங்குவது மட்டுமே இப்போது உள்ள நிர்வாகிகளின் குறிக்கோளாக உள்ளது. இப்போது உள்ள நிர்வாகிகளின் இந்த போக்கு பல உறுப்பினர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. எனக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தால் தங்களையும் நீக்கி விடுவார்களோ என்ற பயம் பல உறுப்பினர்களிடம் உள்ளது.

சங்கத்திற்காக இப்போது உள்ள நிர்வாகிகளை விட நான் அதிகமாக உழைத்துள்ளேன். ஏ சி சண்முகம் (ஏ சி எஸ்) அவர்களிடம் இருந்து சங்க கட்டடம் கட்டுவதற்காக வட்டியில்லா கடனாக பெரும் தொகை, சங்க உறுப்பினர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை, கல்வி உதவி உள்ளிட்ட பல்வேறு பணிகள் என்னால் நடந்துள்ளன. எனக்கே இந்த நிலைமை என்றால் மற்றவர்களின் நிலைமையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. இப்படி உறுப்பினர்களை நீக்குவது எதற்கும் தீர்வாகாது. எதுவாக இருந்தாலும் சுமுகமாக பேசி தீர்க்க வேண்டும். சங்க உறுப்பினர்கள் 64 பேர் இதுவரை இறந்துள்ளனர். அவர்களுக்கு இறுதி சடங்கிற்கான பணம் கூட வழங்கப்படவில்லை. சங்க கட்டிட பணிகளை முடிப்பது, மற்றும் சங்க உறுப்பினர்களின் நலனில் கவனம் செலுத்த வேண்டும். அதுவே தற்போதைய தேவை. ஒரு உறுப்பினராக சங்க விதிகள் அனைத்தையும் அறிந்தவன் என்ற முறையில் எனது தரப்பு விளக்கத்தை அளிப்பது என் கடமை என்பதால் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கொண்டாடி இருந்தால் ஆயிரத்தில் ஒருவன் 2,3,4 பாகங்கள்: செல்வராகவன் ‛அப்டேட்'கொண்டாடி இருந்தால் ஆயிரத்தில் ... விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி நடிப்பில் மவுன படமாக உருவாகும் 'காந்தி டாக்ஸ்' விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)